சஞ்சு வந்தாச்சு… அப்போ அடுத்த சீசன்தான் ‘one last time’-ஆ… ரசிகர்கள் சோகம்!

vinoth
சனி, 15 நவம்பர் 2025 (13:35 IST)
கடந்த ஒரு வாரத்துக்கும் மேல் அதிகமாக விவாதிக்கப்பட்ட ஜடேஜா-சாம்சன் டிரேட் ஒருவழியாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது.  சஞ்சு சாம்சனை பெற்றுக்கொண்டு சென்னை அணி சாம் கரண் மற்றும் ஜடேஜாவை விட்டுக் கொடுத்துள்ளது.

இந்த டிரேடை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள சி எஸ் கே நிர்வாகம். ‘வணக்கம் சஞ்சு’ என சஞ்சு சாம்சனை சிஎஸ்கே குடும்பத்துக்குள் வரவேற்றுள்ள நிர்வாகம், ரவீந்திர ஜடேஜா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகிய இருவருக்கும் நன்றி தெரிவித்து அவர்களுக்குப் பிரியாவிடைக் கொடுத்துள்ளது.

இந்நிலையில் சஞ்சு அணிக்குள் வந்துள்ள நிலையில் இதுவே தோனிக்குக் கடைசி சீசனாக இருக்கும் என கருத்துகள் எழ ஆரம்பித்துள்ளன. சென்னை அணிக்குத் தோனிக்குப் பிறகு ஒரு நிலையான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தேவைப்பட்டது. அது இப்போது சஞ்சு மூலம் பூர்த்தி அடைந்துள்ளதால் அவர் 2026 ஆம் ஆண்டு சீசனோடு ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வணக்கம் சஞ்சு… டிரேடிங்கை அதிகாரப்பூர்வமாக அறிவித்த சிஎஸ்கே!

32 பந்துகளில் சதம்.. நிறுத்த முடியாத காட்டாற்று வெள்ளமாக வைபவ் சூர்யவன்ஷி!

RCB அணியில் இந்த வீர்ரகள் எல்லாம் விடுவிக்கப்படவுள்ளார்களா?

சி எஸ் கே அணியில் இருந்து இவர்கள் எல்லாம் கழட்டிவிடப்படுகிறார்களா?... பரவும் தகவல்!

பும்ரா புயலில் வீழ்ந்த தென்னாப்பிரிக்கா.. 159 ரன்களுக்கு ஆல் அவுட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments