Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

'மனைவியின் மாத்திரைகளே என் மீதான தடைக்கு காரணம்' - யாஸிர் ஷா

'மனைவியின் மாத்திரைகளே என் மீதான தடைக்கு காரணம்' - யாஸிர் ஷா
, செவ்வாய், 9 பிப்ரவரி 2016 (13:20 IST)
ஊக்க மருந்து சோதனையில் தோல்வியடைந்த பாகிஸ்தான் கிரிக்கட் வீரர் யாஸிர் ஷா குற்றத்தை ஒப்புக் கொண்டதை அடுத்து, அவருக்கு 3 மாதங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
 

 
கடந்த ஆண்டு நவம்பரில், பந்துவீச்சாளர் யாஸிர் ஷாவிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்தான குளோர்தாலிடோன் இருந்த்தாக் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊடக அறிக்கை தெரிவித்திருந்தது.
 
அந்தச் சோதனையில் தோல்வியடைந்ததால் யாஸிர் ஷாவை பாகிஸ்தான் கிரிக்கட் வாரியம் சென்ற ஆண்டு இறுதியில் தற்காலிகமாக இடைநீக்கம் செய்திருந்தது.
 
தனது மாத்திரைக்குப் பதிலாக, தனது மனைவியின் மாத்திரையினை தவறுதலாக உட்கொண்டிருந்ததாக யாஸிர் ஷா தெரிவித்த காரணததை தாங்கள் ஏற்றுக் கொண்டுள்ளதாக சர்வதேச கிரிக்கட் பேரவை தெரிவித்துள்ளது.
 
இவர் மீதான 3 மாத தடையினை பின் தேதியிட்டு, டிசம்பர் 27 முதல் கணக்கிட்டுள்ள சர்வதேச கிரிக்கட் பேரவை, அவரது மூன்று மாதத்தடை மாதத் தடை மார்ச் 27 வரை நீடிக்கும் என அறிவித்துள்ளது.
 
இதனால் ஆசியக் கோப்பை போட்டிகள், மற்றும் உலகக் கோப்பை 20-20 போன்ற முக்கிய போட்டிகளில் அவர் விளையாட முடியாது சூழல் ஏற்பட்டுள்ளது.
 
பாகிஸ்தான் அணியின் வெற்றிகளில் பல தடவைகள் யாஸிர் ஷா முக்கிய பங்காற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil