Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடைசி ஓவரை ஏன் க்ருனாள் பாண்டியா வீசினார்?... தோனி சிக்ஸ் அடிக்க வேண்டுமென்றே இப்படி ஒரு முடிவா?

vinoth
சனி, 29 மார்ச் 2025 (08:36 IST)
ஐபிஎல் தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டிகளில் ஒன்றாக சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதும் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் பெங்களூர் அணி சென்னை அணியை 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, தங்கள் இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது.

முதலில் பேட் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 196 ரன்கள் சேர்த்தது. அதன்பின்னர் ஆடிய சென்னை அணி 20 ஓவர்களில் 146 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அந்த அணியின் மூத்த வீரரான தோனி 30 ரன்கள் விளாசி கடைசி நேரத்தில் ரசிகர்களுக்கு கிளுகிளூப்பைத் தந்தார்.

இந்த போட்டியில் ஆர் சி பி அணி 20 ஆவது ஓவரை க்ருணாள் பாண்ட்யாவை வீசவைத்தது. அந்த ஓவரில் தோனி இரண்டு சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி அடித்தார்.ஆனால் புவனேஷ்வர் குமார் மற்றும் யாஷ் தயாள் ஆகியோருக்கு தலா ஒரு ஓவர்கள் இருந்தும்- அவர்கள் நேற்றைய போட்டியில் சிறப்பாகப் பந்துவீசியும் ஏன் அவர்களை அந்த ஓவரை வீச அழைக்கவில்லை என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதன் மூலம் கடைசி ஓவரில் தோனி சிக்ஸ் அடிக்கவேண்டும் என்பதற்காகவே ஒரு சுழல்பந்து வீச்சாளரை வீச வைத்தது போல இருந்தது எனவும் அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உள்ளே வந்த பதிரானா.. யோசிக்காம பவுலிங் எடுத்த ருதுராஜ்! - CSK vs RCB ப்ளேயிங் 11 நிலவரம்!

பெங்களூர் பங்காளிகளுக்கு பாயாசத்த போட்ற வேண்டியதுதான்! - சிஎஸ்கே வெளியிட்ட வீடியோ வைரல்!

போன சீசனில் பறிபோன ப்ளே ஆஃப் வாய்ப்பு! பழிதீர்க்குமா சிஎஸ்கே? - இன்று CSK vs RCB மோதல்!

கோலி, ரோஹித் ஷர்மாவுக்கு சம்பளக் குறைப்பா?... பிசிசிஐ எடுத்த முடிவு!

இங்கிலாந்து தொடருக்கான அணிக்குக் கேப்டன் அவர்தான்… பிசிசிஐ எடுத்த முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments