Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு நாள் போட்டிகளில் முக்கியத்துவம் பெரும் ஹர்திக் பாண்ட்யா… தினேஷ் கார்த்திக் சொல்லும் கருத்து!

Webdunia
வெள்ளி, 30 டிசம்பர் 2022 (09:17 IST)
இந்திய ஒரு நாள் அணிக்கு ஹர்திக் பாண்ட்யா துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணி ஜனவரி மாதம் இலங்கைக்கு எதிராக விளையாடும் டி 20 தொடரில் இந்திய அணிக்குக் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் மூத்த வீரர்கள் பலருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் கோலி, ரோஹித் ஷர்மா, கே எல் ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் இடம்பெறவில்லை.

இந்நிலையில் இந்த தொடரில் முக்கியமான மாற்றம் ஒன்றை செய்துள்ளது. டி 20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் துணைக் கேப்டனாக செயல்பட்டு வந்த கே எல் ராகுலிடம் இருந்து அந்த பொறுப்பு விலக்கப்பட்டுள்ளது. டி 20 போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் துணைக் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். அதே போல ஒரு நாள் போட்டிகளில் ஹர்திக் பாண்ட்யா துணைக் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதுபற்றி பேசியுள்ள தினேஷ் கார்த்திக் “பிசிசிஐ எடுத்திருக்கும் இந்த முடிவு நுணுக்கமானது மற்றும் முக்கியமானது. 50 ஓவர் உலகக்கோப்பையைக் கணக்கில் கொண்டே இந்த முடிவை பிசிசிஐ எடுத்துள்ளது” எனக் கூறியுள்ளார். அதனால் ரோஹித் ஷர்மாவுக்குப் பிறகு இந்திய அணியை ஒருநாள் போட்டிகளில் ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக செயல்பட வாய்ப்புள்ளது என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments