Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடரில் இருந்து வெளியேற காரணம் என்ன? - தோனி விளக்கம்

Webdunia
புதன், 11 மே 2016 (17:07 IST)
நேற்று தோனி தலைமையிலான ரைஸிங் புனே சூப்பர்ஜெயண்ட்ஸ் அணியும், வார்னர் தலைமையிலான சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இதில் புனே அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியிடம் தோல்வியடைந்தது.
 

 
இந்த தோல்வியின் மூலம் புனே அணி, ஏறக்குறைய பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை இழந்துள்ளது. இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ள புனே அணி 8 தோல்வியை சந்தித்துள்ளது.
 
தோல்விக்கான காரணம் குறித்து கூறியுள்ள புனே அணியின் கேப்டன் தோனி, ”வெற்றி நெருங்கி வந்த வேளையில் ஆட்டத்தை இழந்ததை ஜீரணிக்க முடியவில்லை. நாங்கள் மூன்று போட்டிகளில், நல்ல முறையாக வெற்றிபெற்று இருந்தோம். தோல்வி அடைந்த போட்டிகளில் கடைசி கட்டத்தில் தவற விட்டுவிட்டோம். சில விஷயங்கள் எங்களுக்கு சாதகமாக அமையவில்லை.
 
பந்து வீச்சில் நன்றாக செயல்பட்டோம். சிறப்பாக செயல்பட்டு அவர்களை கட்டுப்படுத்தினோம். எங்கள் பந்து வீச்சை அவர்களுடன் ஒப்பிடுகையில், அவர்கள் சூழ்நிலைகளை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டனர்.
 
ரஹானேவை தொடக்கத்திலேயே இழந்த விட்டோம். விக்கெட் விழும்போது ஒரு நிலையான பார்ட்னர்ஷிப் அமைவது முகவும் முக்கியமானதாகும். ஸம்பா அபாரமாக செயல்பட்டார். அவரை ஆரம்பித்திலேயே ஆடும் லெவனில் கொண்டுவர விரும்பினோம். ஆனால். அப்போது இது கடினமாக இருந்தது” என்று கூறியுள்ளார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments