Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐசிசியிடம் இருந்து பிசிசிஐ வாரியத்திற்கு கிடைக்கும் ஆண்டு வருவாய் எவ்வளவு?

Webdunia
வியாழன், 11 மே 2023 (18:16 IST)
2024 ஆம் ஆண்டு முதல் 2027 ஆம் ஆண்டு வரையிலான வருவாய் பகிர்வு பரிந்துரை திட்டத்தை ஐசிசி கவுன்சில் அறிவித்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு இந்திய கிரிக்கெட் அமைப்பாக பிசிசிஐ அமைப்பு அதிக வருவாய் ஈட்டித் தருகிறது. இதற்கடுத்ததாக இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் வருவாய் ஈட்டித் தருகின்றன.

இந்த 3 நாடுகளுக்கு ஐசிசி கவுன்சில் வருவாயை சமவிகிதத்தில் பகிர்ந்து அளிதிது வந்த நிலையில் வரும் 2024 ஆம் ஆண்டு முதல் 2027 ஆம் ஆண்டு வரையிலான பகிர்வு திட்டத்தை ஐசிசி அமைப்பு அறிவித்துள்ளது.

அதன்படி,  ஐசிசி வருமானத்தில் இந்தியாவுக்கு ரூ.1904 கோடி வருவாய் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது ஐசிசி கவுன்சிலின் மொத்த வருவாயில் பிசிசிஐக்கு 38. சதவீதம் கிடைக்கும் என்றும், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திற்கு ரூ.338 கோடியும்(6.89 சதவீதம்), ஆஸ்திரேலியாவுக்கு ரூ.307 கோடி (6,29 சதவீதம்)வருவாய் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

4வதாக பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு ரூ.282 கோடி (5.73 சதவீதம்) என்று கூறப்படுகிறது.

இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ்,  ஜிம்பாவே, அயர்லாந்து  உள்ளிட்ட கிரிக்கெட் வாரியத்திற்கு இத்தனை கோடி வருவாயைப் பகிர்ந்தளிக்கும் ஐசிசி கவுன்சிலுக்கு ஆண்டு வருமானம் ரூ.4919 கோடி இருக்கும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நான் ஓய்வை அறிவித்துவிட்டால் என்னை நீங்கள் பார்க்க முடியாது… கோலி தடாலடி!

மைதானத்தில் வழங்கிய தரமற்ற உணவால் மயங்கி விழுந்த ரசிகர்..! கர்நாடகா கிரிக்கெட் சங்கம் மீது வழக்குப்பதிவு..!!

“தொடர்ந்து நான்காவது தோல்வி… வீரர்கள் அதை ஒப்புக்கொள்ள வேண்டும்” – சஞ்சு கேப்டன் ஆதங்கம்!

சி எஸ் கே அணியை விட்டு விலகுகிறாரா ஸ்டீபன் பிளமிங்? காசி விஸ்வநாதன் பதில்!

கேப்டன் சாம் கர்ரன் அபார பேட்டிங்.. பஞ்சாப் அணிக்கு ஆறுதல் வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments