Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாட்டில் வீச்சு சம்பவம் இனி தொடர வேண்டாம் - சச்சின்

பாட்டில் வீச்சு சம்பவம் இனி தொடர வேண்டாம் - சச்சின்
, வியாழன், 8 அக்டோபர் 2015 (11:28 IST)
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி படுதோல்வியை  அடைந்தது. அப்பொழுது மைதானத்தில் இருந்த ரசிகர்கள் தண்ணீர் பாட்டில்களை வீசி ரகளையில் ஈடுபட்டனர். இச்சம்பவம் இனி தொடர வேண்டும் என்று சச்சின் டெண்டுல்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.


 

 
கட்டாக்கில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி படுதோல்வியை தழுவியது. அப்பொழுது இந்திய அணி தோல்வி அடையும் நேரத்தில் ஆத்திரம் அடைந்த ரசிகர்கள் மைதானத்தில் தண்ணீர்பாட்டில்களை வீசி ரகளையில் ஈடுபட்டனர். இதனால் ஆட்டம் சில மணி நேரம் பாதிக்கப்பட்டு மைதானத்திலேயே இந்திய வீரர்கள் அமர்ந்தனர்.
 
இச்சம்பவம் குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்  சச்சின் டெண்டுல்கர் கொச்சியில் செய்தியாளருக்கு அளித்த பேட்டியில், ‘கட்டாக் மைதானத்தில் இந்திய வீரர்கள் விளையாடும் போடு ரசிகர்கள் மைதானத்தில் இருந்து பாட்டில் வீச்சிய சம்பவம் நிச்சயம் கிரிக்கெட் விளையாட்டுக்கு நல்லதல்ல என்றும் இதற்கு முன்பும் இதே போன்ற சம்பவம் நடந்துள்ளது என்பதால் இது போன்ற சம்பவம் இனி தொடரவேண்டும் என்றும் சச்சின் கேட்டு கொண்டுள்ளார்.
 
இனி தவறுகளில் இருந்து  ரசிகர்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் நாம் கிரிக்கெட் மீது மிகுந்த நேசம் கொண்டிருக்கிறோம். இதனால் தோல்வி அடையும் நேரங்களில், ஏமாற்றத்திற்கும், வெறுப்புக்கும் உள்ளாகிறோம். ஏமாற்றத்தை வெளிப்படுத்த வேறு வழி இருக்கிறது. ஆனால் கட்டாக்கில் ரசிகர்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்திய விதம் சரியான வழியல்ல. கட்டாக் சம்பவம் குறித்து ரசிகர்கள் அனைவரும் சிந்தித்து பார்த்து, இனி கிரிக்கெட் ரசிகர்கள்முதிர்ச்சியுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் தோல்வியை இதைவிட சிறந்த வழியில் கையாள வேண்டும்’ என்றும் சச்சின் தெரிவித்தார்.
 

Share this Story:

Follow Webdunia tamil