Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செய்ண்ட் லூசியா டெஸ்ட்: டிராவில் முடிந்தது இலங்கை- வெஸ்ட்இண்டீஸ் போட்டி

Webdunia
செவ்வாய், 19 ஜூன் 2018 (16:01 IST)
செய்ண்ட் லூசியா மைதானத்தில் நடைபெற்ற இலங்கை- வெஸ்ட்இண்டீஸ் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.
 
வெஸ்ட்இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த டெஸ்டின் முதல் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து இரு அணிகளும் மோதும் 2வது டெஸ்ட் போட்டி செய்ண்ட் லூசியாவில் கடந்த 14ம் தேதி தொடங்கியது.
 
இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் இலங்கை அணி 253 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக சன்டிமால் 119 ரன்கள் எடுத்தார். இதையடுத்து, விளையாடிய வெஸ்ட்இண்டீஸ் அணி 330 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக ஸ்மித் 61 ரன்கள் எடுத்தார்.
 
இதையடுத்து, விளையாடிய இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சில் 342 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக மெண்டிஸ் 87 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு 296 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதையடித்து, விளையாடிய  வெஸ்ட்இண்டீஸ் அணி 5-ஆம் நாள் ஆட்ட முடிவில் 147 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை: வெற்றியை நெருங்குகிறது தென்னாப்பிரிக்கா..!

குடும்ப அவசர நிலை சூழல்… இங்கிலாந்துக்கு தொடருக்கு நடுவே இந்தியா திரும்பும் கம்பீர்..!

டி20 போட்டியில் 19 சிக்ஸர்கள்.. கிறிஸ் கெய்ல் சாதனையை முறியடித்த நியூசிலாந்து வீரர்..!

இங்கிலாந்து தொடரில் இந்திய அணியின் தொடக்க ஜோடி இதுதான்… வெளியான தகவல்!

மூன்றாவது நாளே முடிந்துவிடுமா டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி? சரியும் விக்கெட்டுக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments