Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங்

Webdunia
வியாழன், 1 நவம்பர் 2018 (13:13 IST)
இந்தியா மற்றும் மே..தீ. அணிகளுக்கிடையிலான இன்று நடைபெறும் ஐந்தாவது ஒருநாள் போட்டியில்  மேற்கு இந்திய தீவுகள் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிஙகை தேர்வு செய்துள்ளது.

கடந்த மாதம் இவ்விரு அணிகளுக்கிடையில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. அதையடுத்து நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நடந்து முடிந்துள்ள  நான்கு  போட்டிகளில் இந்தியா 2 போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸ் ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி யாருக்கும் வெற்றி தோல்வியின்றி டையில் முடிந்தது. இதனால் இந்தியா தொடரில் 2-1 க்கு என முன்னிலையில் உள்ளது.

சற்றுமுன் இந்தப்போட்டியின் டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் கேப்டன் ஹோல்டர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.இந்த போட்டியில் இரு அணிகளும் வெற்றி பெறுவது முக்கியம் என்பதால் போட்டியில் பரபரப்பிற்குப் பஞ்சம் இருக்காது. இன்னும் சற்று நேரத்தில் போட்டி தொடங்க இருக்கிறது. இரு அணிகளிலும் விளையாடும் வீரர்கள் விவரம்

மேற்கு இந்திய தீவுகள் அணி:-
கைரன் பவல், , ஷேய் ஹோப், மார்லன் சாமுவேல்ஸ், ஹெட்மைர், ரோவன் பவல், ஹோல்டர், ஃபேபியன் ஆலன், , கேமார் ரோச், கீமோ பால், தேவேந்திர பிஷூ, ஓஷானே தாமஸ்

இந்திய அணி;-
ரோஹித் ஷர்மா, தவான், கோஹ்லி, ராயுடு, தோனி, கேதர் ஜாதவ், ஜடேஜா, புவனேஷ்குமார், குல்தீப் யாதவ், கலீல் அகமது, பூம்ரா

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசியக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு எப்போது?

சிஎஸ்கே அணியிடம் இருந்து ‘அதை’தான் கேட்டுள்ளேன்… அஸ்வின் விளக்கம்!

100 கோடி நஷ்டஈடு வழக்கு! நீதிமன்றம் வர மறுத்த தோனி! - என்ன காரணம்?

மாநில டி 20 லீக்கில் இருந்து தடை செய்யப்பட்ட யாஷ் தயாள்!

என் உலகமே அவங்கதான்… எல்லா வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்த சஞ்சு சாம்சன்!

அடுத்த கட்டுரையில்
Show comments