Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

11 ஆவது உலக கோப்பை போடிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு

11 ஆவது உலக கோப்பை போடிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு
, திங்கள், 12 ஜனவரி 2015 (11:25 IST)
வரும் 2015 ஆம் ஆண்டு நடைபெறும் 11 ஆவது உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.


 
11 ஆவது உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வரும் பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி தொடங்கி மார்ச் 29 ஆம் தேதி வரை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் நடைபெறவுள்ளது. இப்போட்டிகள் தொடங்க 33 தினங்கள் உள்ள நிலையில், இத்தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஜாசன் ஹோல்டர் (கேப்டன்), கிறிஸ் கெய்ல், சாமுவேல்ஸ், சுனில் நரின், சுலிமான் பென், டேரன் பிராவோ, ஜோனதன் கார்ட்டர்,  வெய்ன் சுமித், ஷெல்டான் கோட்ரெல், தினேஷ் ராம்டின், கெமார் ரோச், ஆந்த்ரே ரஸ்செல், டேரன் சேமி, லென்டில் சிமோன்ஸ், ஜெரோம் டெய்லர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
 
வெய்ன் பிராவோ, பொல்லார்ட் ஆகியோர் உலக கோப்பை  அணியில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil