Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”வாய்ப்புகளை சரியாக பயன்படுத்ததால் தோல்வியடைந்தோம்” - விராட் கோலி

Webdunia
ஞாயிறு, 24 மே 2015 (14:46 IST)
வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளாததால் தோல்வியடைந்தோம் என்று பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.
 
கடந்த வெள்ளிக்கிழமை [22-05-15] அன்று நடைபெற்ற 8ஆவது ஐபிஎல் போட்டியின் 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இதில் 3 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி தோல்வியடைந்தது.


 
விராட் கோலி தோல்விக்கு பிறகு கூறுகையில், ”நாங்கள் பேட்டிங்கில் 15 முதல் 20 ரன்கள் வரை குறைவாக எடுத்து விட்டோம். எங்களது தொடக்கம் சரியாக அமையவில்லை. சில விக்கெட்டுகளை நாங்கள் துரதிர்ஷ்டவசமாக இழந்தோம். இதுபோன்ற ஆடுகளத்தில் குறைவான் ரன் எடுத்தால் சிக்கலாகத்தான் இருக்கும்.
 
நாங்கள் பீல்டிங்கின்போது எதிர்பாராதவிதமாக மூன்று, நான்கு வாய்ப்புகளை தவற விட்டுவிட்டோம். எங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி இருந்தால் ஆட்டத்தின் முடிவு எங்களுக்கு சாதகமாக மாறி இருக்கும்” என்றார்.
 

சாதனை படைத்த RCB vs CSK போட்டி..! இத்தனை கோடி பேர் பார்த்தார்களா..?

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

சிஎஸ்கே தோல்விக்கு காரணமான தோனியின் சிக்ஸர்! – தினேஷ் கார்த்திக் சொன்ன விளக்கம்!

1 சதவீதம் சான்ஸ்தான் இருக்கா..! ஜீரோவில் இருந்து ஹீரோ ஆகுங்க! -கோலியின் வீடியோ வைரல்!

சிஎஸ்கேவின் தோல்வியில் முக்கிய காரணம் இவர்தான்..! ஆறுச்சாமி ஷிவம் துபேவை ரவுண்டு கட்டும் ரசிகர்கள்!

Show comments