ரோஹித் ஷர்மா & ராகுல் ரெண்டு பேருமே ஓப்பனராக தேவையில்லை… இளம் வீரர்களை பரிந்துரைக்கும் வாசிம் ஜாஃபர்!

Webdunia
வெள்ளி, 18 நவம்பர் 2022 (10:05 IST)
இந்திய டி 20 அணிக்கு இளம் ஓப்பனர்கள் வேண்டும் என வாசிம் ஜாபர் பரிந்துரைத்துள்ளார்.

உலகக்கோப்பையில் இருந்து அரை இறுதியோடு வெளியேறிய இந்திய அணியை முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். அதில் குறிப்பாக அணியில் இருக்கும் சீனியர் வீரர்கள் ஓய்வை அறிவிக்கவேண்டும் என்று குரல்கள் எழுந்துள்ளன.

அந்தவகையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மாண்டி பேனேசர் “இந்திய அணியில் கோலியை தவிர, ரோஹித் ஷர்மா, அஸ்வின் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகிய சீனியர் வீரர்களும் உடனடியாக ஓய்வை அறிவிக்கவேண்டும்” எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் டெஸ்ட் வீரர் வாசிம் ஜாஃபர் இந்திய டி 20 அணியில் பண்ட் மற்றும் சுப்மன் கில் ஆகியோரை தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். இந்த இணையை நியுசிலாந்து அணிக்கு எதிரான போட்டிகளில் களமிறக்கி பரிசோதிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 டி20 உலகக்கோப்பைக்கு இந்திய அணி தயாராவது எப்போது? கம்பீர் பதில்..!

ஐசிசி தலைவர் பொறுப்பில் இப்போது கங்குலிதான் இருந்திருக்க வேண்டும்… மம்தா பானர்ஜி பேச்சு!

தோனியின் முக்கியமான சாதனையை சமன் செய்த குயிண்ட்டன் டிகாக்!

மீண்டும் தொடங்கிய சஞ்சு –ஜடேஜா ட்ரேட் பேச்சுவார்த்தை!

ஆசியக் கோப்பை விவகாரம்.. எட்டப்பட்ட சுமூக முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments