Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’கோலி இப்படி ஆடியதை நம்ப முடியவில்லை’ - விவியன் ரிச்சர்ட்ஸ்

’கோலி இப்படி ஆடியதை நம்ப முடியவில்லை’ - விவியன் ரிச்சர்ட்ஸ்
, திங்கள், 25 ஜூலை 2016 (19:01 IST)
விராட் கோலி இரட்டை சதம் அடித்ததை தன்னால் நம்ப முடியவில்லை என்று மேற்கிந்திய தீவுகள் அணி ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ் கூறியுள்ளார்.
 

 
இதுகுறித்து விவியன் ரிச்சர்ட்ஸ் பிசிசிஐ இணையத்தளத்திற்கு அளித்துள்ள பேட்டியில், ”நான் விடுதியில் கோலியை சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்ததை [டெஸ்ட் போட்டிக்கு முன்பாக] நினைத்துப் பார்க்கிறேன். ஆனால், அந்த சொற்களை இரட்டைச் சதமாக மாற்றுவார் என்பதை நம்ப முடியல்லை.
 
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரானதாக இருந்தபோதிலும், நான் ஒரு பேட்ஸ்மேனாக, பார்ப்பதற்கு மிக அழகாக இருந்தது. அவருடைய அருமையான ஆட்டத்தை நான் பாராட்டுகிறேன். இது ஒரு அற்புதமான சதம் என்று நினைக்கிறேன்.
 
விராட் கோலி சதமடிப்பதை முதன்முறையாக இப்போதுதான் பார்க்கிறேன். ஆனால், அவர் அதை இரட்டைச் சதமாக ஆக்கிவிட்டார்” என்றூ கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெஸ்ட் இண்டீஸ் வீரர்களை டுவிட்டரில் கலாய்த்த ஹர்பஜன் சிங்!