Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாம் பார்த்த சிறந்த வீரர்களில் கோலி ஒருவர்… மனம் திறந்து பாராட்டிய கபில் தேவ்!

vinoth
புதன், 11 டிசம்பர் 2024 (15:27 IST)
2024 ஆம் ஆண்டு இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் கோலிக்கு ஒரு சோகமான ஆண்டாக உள்ளது. இந்த ஆண்டில் அவர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சராசரியாக 25 ரன்கள்தான் சேர்த்து வருகிறார். விரைவில் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டி நடக்கவுள்ள நிலையில் கோலியின் ஃபார்ம் கவலையளிக்கிறது.

ஆனால் ஆஸ்திரேலியாவில் எப்போதுமே கோலி மிகச் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்து வந்துள்ளார். அதனால் அவர் தன்னுடைய ஃபார்மை மீட்டுக்கொள்ள இந்த தொடர் உதவும் எனத்தெரிகிறது. அதற்கேற்றார் போல முதல் டெஸ்ட்டில் மிகச்சிறப்பாக விளையாடி சதமடித்தார். ஆனால் இரண்டாவது டெஸ்ட்டில் சொதப்பினார்.

இந்நிலையில் கோலி பற்றி பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் “நாம் பார்த்த கிரிக்கெட் வீரர்களில் பெஸ்ட் என்று சொல்லப்பட கூடியவர்களில் கோலியும் ஒருவர். தலைசிறந்த வீரர்களைப் பட்டியலிட்டால் அதில் கண்டிப்பாக கோலி இருப்பார்.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேப்டன் சஞ்சு சாம்சன் அவுட்.. பெங்களூருக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் வெற்றி பெறுமா?

அவர்கள் போட்டியை முடித்ததை நினைத்தால் எனக்கு இன்னமும் சிரிப்பு வருகிறது –ஸ்ரேயாஸ் ஐயர்!

மேக்ஸ்வெல்லின் செயலால் கடுப்பான ஸ்ரேயாஸ் ஐயர்…!

வாரி வழங்கும் வள்ளல் ஆன ஷமி… நேற்றையப் போட்டியில் படைத்த மோசமான சாதனை!

தோனி, அஸ்வினின் மூளை வேலை செய்வது நின்று விட்டதா?... கடுமையாக விமர்சித்த மனோஜ் திவாரி!

அடுத்த கட்டுரையில்
Show comments