Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏன் இப்படி பண்ணுறீங்க… ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஆதரவாய் செயல்பட்ட கோலி- சொல்பேச்சு கேட்டு நடந்த ரசிகர்கள்!

vinoth
வெள்ளி, 12 ஏப்ரல் 2024 (08:29 IST)
குஜராத் டைட்டன்ஸ் அணிக்குக் கேப்டனாக இருந்து வெற்றிகரமாக ஒரு கோப்பையையும் ஒருமுறை இரண்டாம் இடத்துக்கும் அணியை வழிநடத்திச் சென்றார் ஹர்திக் பாண்ட்யா. ஆனால் அவர் திடீரென மும்பை இந்தியன்ஸ் அணியால் வாங்கப்பட்டு அந்த அணிக்கு கேப்டனாக்கப் பட்டார். இந்த முடிவு மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகர்களுக்கே பிடிக்கவில்லை.

அதனால் அவர் டாஸ் போட செல்லும்போதும், களமிறங்கும் போது அவரை தாக்கி கடுமையாக ஏளனம் செய்து கோஷங்களை எழுப்பி வருகின்றனர். நேற்றைய ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டியிலும் இது தொடர்ந்தது. 

அவர் பேட் செய்ய வரும் போது ரசிகர்கள் அவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அப்போது ஃபீல்ட் செய்துகொண்டிருந்த கோலி ரசிகர்களிடம் “ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள். அவரை என்கரேஜ் செய்யுங்கள் என சைகை மூலமாகக் காட்டினார். அதன் பின்னர் ரசிகர்கள் ஹர்திக்கை உற்சாகப்படுத்தும் விதமாக “ஹர்திக் ஹர்திக்” என கோஷமெழுப்பினர்.

தொடர்புடைய செய்திகள்

வங்கதேசத்துக்கு எதிரான பயிற்சி போட்டியில் கோலி மிஸ்ஸிங்!

யார் இந்த அஸாம் கான்… 100 கிலோ எடையோடு சர்வதேசக் கிரிக்கெட்டில் தாக்குப் பிடிப்பாரா?

இந்திய ஜெர்ஸியை அணிவது இனிமையானது… கம்பேக் குறித்து ரிஷப் பண்ட் நெகிழ்ச்சி

இந்திய அணியின் ட்ரம்ப் கார்டே அந்த வீரர்தான்… சுரேஷ் ரெய்னா சொல்லும் ஆருடம்!

அமெரிக்கா கிளம்பிய கோலி… பயிற்சி ஆட்டத்தில் விளையாடுவாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments