Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி 20 கிரிக்கெட்டில் அவர்களுக்காகதான் ஓய்வு பெற்றேன்.. மனம் திறந்த கோலி!

vinoth
சனி, 3 மே 2025 (13:08 IST)
சச்சின் காலத்துக்குப் பிறகு கடந்த 10 ஆண்டுகளாக உலகளவில் கிரிக்கெட்டின் முகமாக இருப்பவர் விராட் கோலி. அவர்தான் இன்றைய தேதியில் அதிகம் சம்பாதிக்கும் கிரிக்கெட் வீரராக உள்ளார். இதனால் அவரை சமூகவலைதளங்களில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. அதிக ரன்கள் குவித்த வீரர். அதிக சதங்கள் அடித்த வீரர் என பல சாதனைகளைத் தன் பேருக்குப் பின்னால் கொண்டுள்ளார்.

தற்போது ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடி வரும் கோலி கடந்த ஆண்டு டி 20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். இந்திய அணி டி 20 உலகக் கோப்பையை வென்ற கையோடு அவர் அந்த முடிவை அறிவித்தார். ஆனால் தற்போது ஐபிஎல் சீசனில் அவர் விளையாடும் விதத்தைப் பார்க்கும்போது அவர் வெகு சீக்கிரமாகவே ஓய்வை அறிவித்து விட்டார் என்று தோன்றுகிறது.

இந்நிலையில் டி 20 ஓய்வு முடிவு குறித்துப் பேசியுள்ள விராட் “அந்த வடிவத்தில் இளைஞர்கள் தயாராக இருக்கிறார்கள். அவர்கள் முழுமையானப் புரிதலை அடையவும், உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும், வேண்டும் என்பதற்காகவே அந்த முடிவு எடுக்கப்பட்டது. அவர்கள் அடுத்த உலகக் கோப்பைக்கு தயாராக போதுமான நேரம் வேண்டும் என்பதால் நான் அந்த முடிவை எடுத்தேன்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜெய்ஸ்வாலும் ஸ்ரேயாஸும் சுயநலமற்ற வீரர்கள்… ஆனால் அதுதான் பிரச்சனை –அஸ்வின் ஆதங்கம்!

ஆசிய கோப்பை அணி தேர்வு குறித்த விமர்சனங்கள்: கவாஸ்கர் பதிலடி..!

முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம் மீது புகார் பதிவு.. கைது செய்யப்படுவாரா?

அஜித் அகார்கர் கூறுவது அபத்தமாக உள்ளது… ஸ்ரேயாஸ் ஐயருக்கு கூடும் ஆதரவு!

ஷுப்மன் கில்லுக்காக சந்தோஷம்… ஆனா ஸ்ரேயாஸுக்காக வருத்தம் – இந்திய அணி தேர்வு பற்றி அஸ்வின் விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments