உலகக்கோப்பையில் சொதப்பல்.. ஜிம்பாப்வே டி20 தொடரில் கோலிக்கு ஓய்வு..? – என்ன காரணம்?

Prasanth Karthick
புதன், 19 ஜூன் 2024 (14:18 IST)
இந்தியா – ஜிம்பாப்வே இடையேயான டி20 தொடரில் இந்திய அணியின் முக்கியமான வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.



இந்திய அணியின் ஓப்பனிங் நட்சத்திர பேட்ஸ்மேன்களாக ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் விளங்கி வருகின்றனர். தற்போது உலகக்கோப்பை டி20 போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் இதில் அவர்கள் விளையாடி வருகின்றனர். உலக கோப்பை டி20 போட்டிகள் முடிந்ததும் ஜிம்பாப்வே – இந்தியா இடையேயான டி20 தொடர் நடைபெற உள்ளது.

ஜூலை 6ம் தேதி தொடங்கும் இந்த டி20 தொடர் மொத்தம் 5 போட்டிகளாக நடைபெற்று ஜூலை 14ம் தேதி முடிவடைகிறது. இந்த டி20 தொடருக்கான இந்திய வீரர்கள் பட்டியல் விரைவில் வெளியாக உள்ள நிலையில், அதில் இந்திய நட்சத்திர வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ஜாஸ்ப்ரித் பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அடுத்தடுத்து நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், சாம்பியன்ஸ் ட்ராபி தொடர்களுக்காக அவர்கள் ஆயத்தம் ஆவதற்காக இந்த ஓய்வு அளிக்கப்பட உள்ளதாகவும், அவர்களுக்கு பதிலாக புதிய இளம் வீரர்களை களம் இறக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2வது நாளே 2வது இன்னிங்ஸ்.. இன்று அல்லது நாளை முடிந்துவிடுமா ஆஷஸ் முதல் டெஸ்ட்..!

கௌகாத்தி டெஸ்ட்… டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா எடுத்த முடிவு!

ஒரே நாளில் அதிக விக்கெட்கள்… ஆஸ்திரேலியாவுக்கு ஒரு நீதி.. இந்தியாவுக்கு ஒரு நீதி- அஸ்வின் காட்டம்!

பந்துவீச்சில் பதிலடி கொடுத்த இங்கிலாந்து.. 9 விக்கெட்டுக்களை இழந்து ஆஸ்திரேலியா தடுமாற்றம்..!

ஆஷஷ் தொடரில் அதிர்ச்சி ஆரம்பம்.. 172 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல்-அவுட்..! 7 விக்கெட் வீழ்த்திய ஸ்டார்க்..!

அடுத்த கட்டுரையில்
Show comments