Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டிராவிட் சாதனையை தகர்த்த விராட் கோலி!

டிராவிட் சாதனையை தகர்த்த விராட் கோலி!
, செவ்வாய், 4 அக்டோபர் 2016 (16:44 IST)
விராட் கோலி தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி தொடர்ச்சியாக 12 டெஸ்ட் போட்டிகளில் வெற்றிப்பெற்றதன் மூலம், முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் சாதனை முறியடிக்கப்பட்டு உள்ளது.
 

 
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற்றது.அதில், இந்திய அணி 197 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
 
இந்நிலையில், கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் செப்டம்பர் 30ஆம் தேதி தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி 178 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
 
இதன் மூலம், டெஸ்ட் போட்டிகளை வென்றெடுத்த அணித் தலைவர்களின் பட்டியலில் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் சாதனையை இளம் கேப்டன் விராட் கோலி சமன் செய்துள்ளார்.
 
மகேந்திர சிங் தோனி 27 வெற்றிகள் [60 போட்டிகள்] பெற்று முதலிடத்திலும், சவுரவ் கங்குலி 21 வெற்றிகள் [49 போட்டிகள்] பெற்று 2வது இடத்திலும், முஹமது அசாருதீன் 14 வெற்றிகள் [47 போட்டிகள்] பெற்று 3வது இடத்திலும் உள்ளனர்.
 
விராட் கோலி [16], டைகர் பட்டோடி [40], சுனில் கவாஸ்கர் [47] ஆகியோர் தலா 9 வெற்றிகளுடன் 4வது இடத்திலும் உள்ளனர்.
 
ராகுல் டிராவிட் 8 வெற்றிகள் [60 போட்டிகள்] பெற்று 5ஆவது இடத்திலும் உள்ளனர். இளம் கேப்டன் விராட் கோலி தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும்பட்சத்தில் பல சாதனைகளை முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மூன்றாவது டெஸ்ட் போட்டி நடக்குமா? நடக்காதா? - பிசிசிஐ திணறல்