Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல் ஒருநாள் போட்டியில் விளையாடுகிறார் கோஹ்லி… கடைசி நேரத்தில் வெளியான தகவல்!

Webdunia
செவ்வாய், 12 ஜூலை 2022 (16:19 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்னும் சிறிது நேரத்தில் தொடங்க உள்ளது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி கடந்த இரண்டு ஆண்டுகளாக மிக மோசமான ஃபார்மில் இருக்கிறார். இதனால் அவர் மீதான விமர்சனங்கள் அதிகளவில் எழுந்துள்ளன. பலரும்  விராட் கோலி தன்னுடைய உச்சத்தை கடந்துவிட்டார். அவரால் இனிமேல் மீண்டும் பழைய கோலியாக விளையாட முடியாது எனக் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டி இன்று மாலை இந்திய நேரப்படி மாலை ஐந்து முப்பது மணிக்கு பகலிரவு போட்டியாக நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் விராத் கோலி பங்கேற்க மாட்டார் என்றும் காயம் காரணமாக அவர் இன்றைய போட்டியில் இருந்து விலகி உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகின.

ஆனால் இப்போது விராட் கோலி காயத்தில் இருந்து தேறிவிட்டார் என்றும் அவர் இன்றைய போட்டியில் விளையாடுவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிசிசிஐக்கு குட்டு வைத்த ஐசிசி… பாகிஸ்தான் பெயரை ஜெர்ஸியில் பொறிக்க உத்தரவு!

கம்பீருக்கு இன்னும் நேரம் கொடுக்க வேண்டும்… கங்குலி திடீர் ஆதரவு!

சாம்பியன்ஸ் ட்ராபிக்கான கேப்டன்கள் போட்டோஷூட்… ரோஹித் ஷர்மாவை அனுப்ப மறுக்கும் பிசிசிஐ!

மீண்டும் கிரிக்கெட் களத்துக்கு திரும்புகிறாரா டிவில்லியர்ஸ்… அவரே கொடுத்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments