Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐசிசி தரவரிசைப் பட்டியலில் விராட் கோலிக்கு இரண்டாவது இடம்

Webdunia
செவ்வாய், 18 நவம்பர் 2014 (15:04 IST)
ஐசிசி தர வரிசை பட்டியலில் ஒருநாள் போட்டிகளின் பேட்ஸ்மேன்களில் இந்தியாவின் விராட் கோலி 2ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
 
ஒவ்வொரு கிரிக்கெட் தொடர் முடிவடைந்த பிறகும் ஐசிசி தர வரிசைப் பட்டியலை வெளியிட்டு வருகிறது. தற்போது இந்தியா - இலங்கை இடையிலான ஒருநாள் போட்டித் தொடர் முடிவடைந்துள்ள நிலையில் புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
 
இந்த தரவரிசைப் வரிசை பட்டியலில் ஒருநாள் போட்டிக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசையில், தென்னாப்பிரிக்காவின் ஏ.பி.டிவில்லியர்ஸ் முதல் இடத்தையும், இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் விராட் கோலி 2ஆவது இடத்தையும் பிடித்துள்ளார். மேலும் இந்திய வீரர்களில், ஷிகர் தவான் தொடர்ந்து 5ஆவது இடத்தையும், மகேந்திர சிங் டோனி 7ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
 
அதுபோல பந்து வீச்சாளர்கள் தர வரிசையில் இந்திய வீரர் புவனேஸ்வர் குமார் 8ஆம் இடத்தையும், ரவீந்திர ஜடேஜா 10ஆம் இடத்தையும் பிடித்து உள்ளனர். 
 
ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில், இலங்கை கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ்,  ரவுண்டர்கள் பிரிவில் முதல் முறையாக முதலிடத்தைக் பிடித்துள்ளார். முதல் பத்து இடங்களுக்குள் இந்திய வீரர்களில் ரவீந்திர ஜடேஜா மட்டும் 4ஆம் இடத்தைப் பிடித்துள்ளார்.

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

Show comments