Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மைதானத்தில் மீண்டும் கோபமடைந்த விராட் கோலி: சமாதானப்படுத்திய நடுவர்கள்! (வீடியோ)

மைதானத்தில் மீண்டும் கோபமடைந்த விராட் கோலி: சமாதானப்படுத்திய நடுவர்கள்! (வீடியோ)

Webdunia
ஞாயிறு, 27 நவம்பர் 2016 (12:37 IST)
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி களத்தில் மிகவும் ஆக்ரோஷமாக செயல்படுபவர். சீக்கிரமாக கோபமடையும் இவர் கேப்டன் பொறுப்பேற்ற பின்னர் சாந்தமாகவே இருந்து வந்தார். இந்நிலையில் அவர் மீண்டும் மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில் கோபமடைந்துள்ளார்.


 
 
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி சமனிலும், இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றியும் பெற்ற நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி மொகாலியில் நேற்று தொடங்கியது.
 
நேற்றைய ஆட்டத்தின் போது இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் ஜடேஜா வீசிய பந்தில் விக்கெட் கீப்பர் பார்த்திவ் பட்டேலால் ஸ்டம்பிங் செய்யப்பட்டு விக்கெட்டை இழந்தார். இந்த விக்கெட்டை இந்திய வீரர்கள் துள்ளிக்குதித்து கொண்டாடினர்.

 
அப்போது விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறிய பென் ஸ்டோக்சை நோக்கி விராட் கோலி ஏதோ கூற இருவரும் முறைத்துக்கொண்டு களத்தில் நின்றனர். அப்போது நடுவர் குறுக்கிட்டு கோலியை சமாதானப்படுத்தினர்.

ஒழுங்கு நடவடிக்கையாக ஷுப்மன் கில் இந்திய அணியில் இருந்து விடுவிப்பு… பிசிசிஐ அதிரடி!

இந்திய அணிக்கு பயிற்சியாளராகும் தகுதி கம்பீருக்கு…? கும்ப்ளே கருத்து!

ஒரு பந்துகூட வீசப்படாமல் கைவிடப்பட்ட இந்தியா vs கனடா போட்டி!

இந்தியா கனடா போட்டியும் மழையால் பாதிக்கப்படுமா?… வானிலை அறிக்கை என்ன சொல்கிறது?

கோலி மட்டுமா யாருமே அந்த மைதானத்தில் ரன்கள் சேர்க்கவில்லை- ஆதரவுக் குரல் தெரிவித்த முன்னாள் பயிற்சியாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments