Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விராட் கோலி, சோயப் அக்தர் என்ன பேசினார்கள் தெரியுமா?

Webdunia
புதன், 13 ஏப்ரல் 2016 (19:25 IST)
தற்போது கிரிக்கெட் உலகில் புதிய ஜாம்பவானாக உருவெடுத்து வருபவர் விராட் கோலி. ஒரு காலத்தில் சச்சின் டெண்டுல்கரின் பெயர் உலக கிரிக்கெட் ரசிகர்களால் எப்படி பேசப்பட்டதோ, அதே போல் விராட் கோலியும் பேசப்பட்டு வருகிறார்.


 
 
தனது அதிவேக பந்து வீச்சால் பேட்ஸ்மேன்களை நிலைகுலைய வைத்த ராவல்பண்டி எக்ஸ்பிரஸ் என வர்ணிக்கப்படும் பாகிஸ்தான் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயப் அக்தர் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியிடம் தான் வைத்த கோரிக்கை ஒன்றை தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் விவரித்துள்ளார்.
 
அந்த பேட்டியில் சோயப் அக்தர் கூறியபோது, முகமது செஷாத், உமர் அக்மல் போன்ற பாகிஸ்தான் அணியில் இருக்கும் வீரர்கள் இந்தியாவின் விராட் கோலியை போல் திறமை கொண்டுள்ளனர். ஆனால் தங்கள் திறமையை சரியாக பயன்படுத்தி ரன் குவிக்க முடியாமல் திணறி வருவதாக கூறினார்.
 
மேலும் நான் விராட் கோலியை சந்தித்த போது பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு ஆலோசனை கூறலாமே என்றேன். அதற்கு பதில் அளித்த கோலி “பாகிஸ்தான் வீரர்களை சந்திக்கும் போது உலகத்தின் உள்ள எதை பற்றி வேண்டுமானாலும் பேசுவேன், ஆனால் கிரிக்கெட்டை பற்றி பேச மாட்டேன். பாகிஸ்தான் வீரர்கள் கிரிக்கெட்டை பற்றி பேசுவதற்கு கொஞ்சம் கூட ஆர்வம் காட்டுவதில்லை என்றார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

டென்பின் பந்து வீச்சில் அபிஷேக்கை வீழ்த்தி பட்டத்தை வென்றார் கணேஷ்!

உங்களுக்காகதான் இம்பேக்ட் பிளேயர் விதி உருவாக்கப்பட்டுள்ளது… கெயிலை மீண்டும் ஐபிஎல் விளையாட அழைத்த கோலி!

RCB வீரர்கள் தோனியை அவமதித்தார்களா?... மைக்கேல் வாஹ்ன் சொன்ன கருத்து!

தோனி ஓய்வு பற்றி என்ன சொன்னார்? சி எஸ் கே CEO காசி விஸ்வநாதன் பகிர்ந்த தகவல்!

இதெல்லாம் ஒரு பொழப்பா.. ஸ்டார் ஸ்போர்ட்ஸை கழுவி ஊற்றிய கவுதம் கம்பீர்! – வைரலாக்கும் நெட்டிசன்கள்!

Show comments