Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜடேஜா, புஜாரா எல்லாம் ஒரு ஆளா? - வினோத் காம்ப்ளி கடுப்பு

Webdunia
செவ்வாய், 24 மே 2016 (16:05 IST)
ரவீந்திர ஜடேஜா, சதீஸ்வர் புஜாரா, விருத்திமான் சஹா ஆகியோரை எவ்வாறு தேர்வு செய்யப்பட்டார்கள் என்று முன்னாள் இந்திய வீரர் வினோத் காம்ப்ளி கேள்வி எழுப்பியுள்ளார்.
 

 
சமீபத்தில் ஜிம்பாப்வேக்கு எதிரான 3 ஒரு நாள் போட்டி மற்றும் 3 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ள இந்திய அணி வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டது.
 
மகேந்திர சிங் டோனி தலைமையிலான இந்திய அணியில் ஃபைஸ் ஃபஸல், யுவேந்திர சாஹல், ஜெயந்த் யாதவ், கருண் நாயர், மன்தீப் சிங் ஆகிய 5 பேர் புதுமுக வீரர்களாக இடம்பெற்றுள்ளனர்.
 
அதேபோல. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணியும் நேற்று அறிவிக்கப்பட்டது.
 
விராட் கோஹ்லி தலைமையிலான டெஸ்ட் அணிக்கு அஜிங்கே ரஹானே துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதில் வேகப்பந்து வீச்சாளரான ஷர்துல் தாக்குர் புதுமுக வீரராக இடம்பிடித்துள்ளார். 
 
இந்திய அணித் தேர்வு குறித்து, முன்னாள் வீரர் வினோத் காம்பிளி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
 
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வினோத் காம்ப்ளி இவ்வாறு கூறியுள்ளார்: 
 
”தேர்வுக்குழுவினருக்கு சிந்தனையே கிடையாது. ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிக்கு என்ன மாதிரியான அணியைத் தேர்வு செய்திருக்கிறார்கள்? புஜாரா, ஜடேஜா, சஹா மற்றும் ஆறு வேகப்பந்து வீச்சாளர்கள் எதன் அடிப்படையில் தேர்வாகியுள்ளார்கள்?”
 
”புஜாரா, ஜடேஜா, சஹா எவ்வாறு தேர்வு செய்யப்பட்டார்கள்? புஜாராவும் சாஹாவும் உள்ளூர்ப் போட்டிகளில் ஒழுங்காக விளையாடவில்லை. தேர்வுக்குழுவினரே, தயவு செய்து விளக்க வேண்டும்”.
 
தேர்வாளர்கள் சாதரணமாக அணியை தேர்வு செய்துள்ளதை ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. இதனால் தான் ஜிம்மி அமர்நாத், உங்கள் அனைவரையும் முட்டாள் என அழைத்தார்”

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்திய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து யூன் 11 முதல் 22 வரை ஒரு நாள் தொடர் மற்றும் டி20 தொடரில் விளையாடவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

U19 மகளிர் டி20 உலகக் கோப்பை.. இந்தியா சாம்பியன்..!

அதிரடி காட்டிய திரிஷா! 82 ரன்களில் சுருண்ட தென் ஆப்பிரிக்கா! - கலகலக்கும் ஜூனியர் பெண்கள் டி20 இறுதிப்போட்டி!

சச்சின் டெண்டுல்கருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது! அஸ்வின், பும்ராவுக்கும் சிறப்பு விருது!

சாம்பியன்ஸ் ட்ராபி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் அணிகள் எவை? - ரவி சாஸ்திரி, ரிக்கி பாண்டிங் கணிப்பு!

இங்கிலாந்துக்கு சான்ஸ் கிடைச்சா இந்தியா செஞ்சதையே செஞ்சிருப்பாங்க! - மைக்கெல் வாகன்!

அடுத்த கட்டுரையில்
Show comments