ப்ளே ஆஃப் போவது யார்? இன்று இறுதிக்கட்ட பரபரப்பில் மூன்று அணிகள்!

Webdunia
ஞாயிறு, 1 நவம்பர் 2020 (09:28 IST)
அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபில் போட்டியின் இறுதி கட்ட ஆட்டங்கள் தொடங்கி விட்ட நிலையில் ப்ளே ஆஃப் செல்ல அணிகள் ஒன்றுடன் ஒன்று மோதி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று நடைபெறும் இரண்டு ஆட்டங்களில் பங்குபெறும் நான்கு அணிகளில் சிஎஸ்கே தவிர மற்ற மூன்று அணிகளும் ப்ளே ஆஃபிற்காக போராடி வருகின்றன. இன்று விளையாடும் கிங்ஸ் லெவன், நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மூன்று அணிகளும் இதுவரையிலான 13 ஆட்டங்களில் 6ல் வெற்றியும் 7ல் தோல்வியும் அடைந்து 12 புள்ளிகள் பெற்று 5,6 மற்றும் 7 ஆகிய இடங்களில் உள்ளன.

சிஎஸ்கே ப்ளே ஆஃப் தகுதியில் இல்லை என்றாலும் இன்றைய ஆட்டத்தில் சிஎஸ்கேவை வீழ்த்தினால் மட்டுமே கிங்ஸ் லெவன் ப்ளே ஆஃப் முன்னேற முடியும். இந்த சீசன் முழுவதும் மிகப்பெரும் போராட்டங்களையும், நூலிழை தோல்விகளையும் சந்தித்து வந்த கிங்ஸ் லெவன் இந்த முறை வெல்லுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அதேசமயம் இரண்டாவது போட்டியான நைட் ரைடர்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் போட்டியானது ஊசிக்கு ஊசி எதிர்முனை பாயும் போட்டியாக பார்க்கப்படுகிறது. இருவருக்குமே வெல்ல வேண்டிய கட்டாயம் உள்ளதால் இந்த போட்டியும் பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசிய கோப்பை: வங்கதேச 'ஏ' அணியுடன் இந்தியா 'ஏ' அரையிறுதி மோதல்

46 ஆண்டுகளுக்குப் பிறகு… சாதனை படைத்த நியுசிலாந்து பேட்ஸ்மேன் டேரில் மிட்செல்!

2026 உலகக் கோப்பை கால்பந்து: 42 அணிகள் தகுதி! முழு விவரங்கள்..!

இந்தியா - வங்கதேச மகளிர் கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு! ஷேக் ஹசீனா விவகாரம் காரணமா?

அவர்கள் மேல் கம்பீர் நம்பிக்கை வைக்க வேண்டும்… கங்குலி அட்வைஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments