வெற்றி யாருக்கு? ரன் மெஷினுக்கா? ஹிட் மேனுக்கா? – வெறித்தனமான வெயிட்டிங்கில் ரசிகர்கள்!

Webdunia
திங்கள், 28 செப்டம்பர் 2020 (13:37 IST)
இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோத உள்ள நிலையில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த ஆண்டின் ஐபிஎல் சீசனில் 10வதாக நடைபெறும் இன்றைய போட்டியில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோத உள்ளன. இரண்டு அணிகளுக்குமே இது இந்த சீசனின் மூன்றாவது போட்டி.

முன்னதாக நடந்த இரு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றியடைந்துள்ளன. இந்த இரு போட்டிகளில் அதிகபட்சமாக மும்பை இந்தியன்ஸ் 195 ரன்கள் சேஸ் செய்துள்ளது. ஆர்சிபி அதிகபட்சமாக 163 வரை சேஸ் செய்துள்ளனர். ஏற்கனவே சில ஆண்டுகள் முன்பாக இந்திய அணியின் கேப்டன் பதவி குறித்து கோலி – ரோகித் ஷர்மா இடையே போட்டி இருந்ததாக பேசப்பட்டு வந்தது.

இதனால் இந்த இருவர் தலைமையில் அணிகள் மோதிக்கொள்ளும் இந்த போட்டியை இருவருக்கும் இடையேயான போட்டியாகவே ரசிகர்கள் பாவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் - பாபர் அசாம்.. ஆனால் எதிர்பாராமல் ஏற்பட்ட துரதிஷ்டம்..!

நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடர்.. திடீரென விலகிய ரிஷப் பண்ட்.. என்ன காரணம்?

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடர்.. பயிற்சியில் விராத் கோஹ்லி..!

ஆஷஸ் தொடரை 4-1 என்ற கணக்கில் வென்ற ஆஸ்திரேலியா.. ரசிகர்கள் கொண்டாட்டம்..

முகமது ஷமிக்கு அனுப்பப்பட்ட சம்மன்.. என்ன தவறு செய்தார்?

அடுத்த கட்டுரையில்
Show comments