தரவரிசையில் முதலிடத்தை பிடிப்பது யார்? – டெல்லி Vs மும்பை இன்று மோதல்!

Webdunia
ஞாயிறு, 11 அக்டோபர் 2020 (16:32 IST)
இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் இரண்டாவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸும், மும்பை இந்தியன்ஸும் மோத உள்ளன.

இதுவரை தலா 6 ஆட்டங்கள் விளையாடியுள்ள இரு அணிகளில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 5 போட்டிகளில் வெற்றிபெற்று தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது. இதுவரை 4 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ள மும்பை இந்தியன்ஸ் தர வரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ளது. முதல் சுற்று இன்றோடு முடியும் நிலையில் இன்று முதல் இடத்தை அடைவதற்கு மும்பை இந்தியன்ஸும், முதல் இடத்தை தக்கவைத்துக் கொள்ள டெல்லி கேப்பிட்டல்ஸும் பல பரீட்சை செய்ய உள்ளன.

இரு அணிகளுமே பேட்டிங் மற்றும் பவுலிங்கில் நல்ல வலுவில் உள்ளன. டெல்லி அணியில் பேட்டிங்கில் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், ப்ரித்வி ஷா, ரபாடா, ஹெட்மெயர், ரிஷப் பண்ட் ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். அதேபோல மும்பை அணியிலும் பாண்ட்யா, பொல்லார்ட், பேட்டின்சன் ஆகியோர் நம்பிக்கை அளிக்கின்றனர். இன்று இந்த இரு அணிகளின் ஆட்டத்தில் சேஸிங் இலக்கு 200 ஐ தாண்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹர்பஜன் சிங்கை இன்ஸ்டாகிராமில் பிளாக் செய்த ஸ்ரீசாந்த்! முடிவுக்கு வராத 'ஸ்லாப்கேட்' சர்ச்சை:

ஐபிஎல் வரலாற்றில் விராட் கோலி புதிய சாதனை: பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களில் அசைக்க முடியாத சாதனை.!

ஐபிஎல் வரலாற்றில் முதல் முறை.. மும்பையை வீழ்த்தி சிஎஸ்கே படைத்த 3 சாதனைகள்..!

உள்நாட்டு போட்டிகளிலும் பும்ரா விளையாட வேண்டும்: பிசிசிஐ அறிவுறுத்தல்..!

அபிஷேக் சர்மா அடித்த அபார சதம்.. துள்ளி குதித்து கொண்டாடிய காவ்யா மாறன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments