இன்று ஒரு இந்தியா - பாகிஸ்தான் போட்டி! பரபரப்பான மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்!

Prasanth K
ஞாயிறு, 5 அக்டோபர் 2025 (10:50 IST)

13வது ஐசிசி மகளிர் உலகக்கோப்பை ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகள் இந்தியா மற்றும் இலங்கையில் பரபரப்பாக நடந்து வருகின்றது.

 

இதில் இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி இலங்கையில் நடைபெறுகிறது. ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி ஏற்கனவே ஒரு வெற்றி பெற்றுள்ள நிலையில் இரண்டாவது வெற்றிக்காக ஆர்வமாக காத்திருக்கிறது. 

 

அதேசமயம் பாத்திமா சனா தலைமையிலான பாகிஸ்தான் அணி தனது முதல் போட்டியிலேயே வங்கதேச அணியிடம் படுதோல்வி அடைந்தது. இந்நிலையில் இந்த இரண்டாவது போட்டியிலாவது வெல்ல வேண்டும் என முனைப்புடன் உள்ளது.

 

ஆனால் மகளிர் உலகக்கோப்பை ஒருநாள் போட்டிகளில் இந்தியாவை 11 முறை எதிர்கொண்ட பாகிஸ்தான் இதுவரை ஒருமுறை கூட வெல்லவில்லை என்பதே வரலாறு. சமீபத்தில் ஆசியக்கோப்பையில் பாகிஸ்தானை வீழ்த்தி பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி செய்தது ஆண்கள் அணி. அப்படியான ஒரு பதிலடியை இன்று மகளிர் அணியும் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆஸ்திரேலியா ஒருநாள், டி20 தொடர்: இந்திய அணி அறிவிப்பு.. கேப்டன் யார்? பும்ராவுக்கு ஓய்வு..!

அகமதாபாத் டெஸ்ட்.. இந்தியா இன்னிங்ஸ் வெற்றி.. சதம் மற்றும் 4 விக்கெட் எடுத்த ஜடேஜா ஆட்டநாயகன்..!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரருக்கு திடீர் உடல்நலக்கோளாறு.. கான்பூர் மருத்துவமனையில் அனுமதி..!

டிக்ளேர் செய்த இந்தியா.. 5 விக்கெட்டை இழந்து தோல்வியின் விளிம்பில் மே.இ.தீவுகள்.. இன்னிங்ஸ் வெற்றியா?

ஆஸ்திரேலியாத் தொடரில் ஷுப்மன் கில்லுக்கு ஓய்வு… ஜெய்ஸ்வால் & சூர்யகுமாருக்கு வாய்ப்பு?

அடுத்த கட்டுரையில்
Show comments