Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விராட் கோலிக்கு முதலிடம்; கேப்டன் தோனிக்கு 10ஆவது இடம் - டைம்ஸ் அறிவிப்பு

விராட் கோலிக்கு முதலிடம்; கேப்டன் தோனிக்கு 10ஆவது இடம் - டைம்ஸ் அறிவிப்பு
, புதன், 29 ஏப்ரல் 2015 (17:01 IST)
இந்தியாவின் விரும்பதக்க ஆணாக இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியை டைம்ஸ் பத்திரிக்கை அறிவித்துள்ளது.
 
ஐ டைம்ஸ் என்ற இணையத்தளம் இந்தியாவில் அதிக விரும்பக்கூடிய ஆண் குறித்து வாக்கெடுப்பு நடத்தியது. இந்த வாக்கெடுப்பில் 20.3 லட்சம் பேர் விராட் கோலிக்கு வாக்களித்துள்ளனர். இதன் மூலம், இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
 

 
100 பேர் கொண்ட இந்த பட்டியலில் ஹிரித்திக் ரோஷன், ஃபாவத் கான், ஃபர்கான் அக்தர், ஷாகித் கபூர், மகேஷ் பாபு, சித்தார்த் மல்ஹோத்ரா, ரன்பீர் கபூர், ரண்வீர் சிங், மகேந்திர சிங் தோனி ஆகியோர் அடுத்தடுத்து பத்து இடங்களைப் பிடித்துள்ளனர்.
 
தமிழ் நடிகர் சூர்யா 15ஆவது இடத்தையும், தனுஷ் 16ஆவது இடத்தையும், கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா 21ஆவது இடத்தையும், யுவராஜ் சிங் 23ஆவது இடத்தையும், சுரேஷ் ரெய்னா 29ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
 
’ஓ காதல் கண்மனி’ துல்கர் சர்மா 45ஆவது இடத்தையும், ’நான் ஈ’ சுதீப் 47ஆவது இடத்தையும், ’தல’ அஜீத் குமார் 48ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர். அதே சமயம் தமிழகத்தில் அதிகம் விரும்பத்தக்க நபர் பட்டியலில் ‘தல’ அஜீத் குமார் முதலிடத்தைப் பிடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil