Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா-இலங்கை கிரிக்கெட் அட்டவணை அறிவிக்கப்படாமல் டிக்கெட் விற்பனையை தொடங்கியது-ஒடிசா கிரிக்கெட் சங்கம்

Webdunia
ஞாயிறு, 19 அக்டோபர் 2014 (13:10 IST)
இந்தியா-இலங்கை அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டிக்கு இன்னும் அட்டவணை அறிவிக்கப்படாமலேயே கட்டாக் போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனையை தொடங்கியுள்ளது, ஒடிசா கிரிக்கெட் சங்கம். 
 
வெஸ்ட்இண்டீஸ் அணி வீரர்கள் சம்பள பிரச்சனைக்காரணமாக இந்திய பயணத்தை பாதியில் ரத்து செய்தனர். எனவே இதற்கு பதில் ஏற்பாடாக இலங்கை அணிக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் அழைப்பு விடுத்தது.

இதை ஏற்றுக்கொண்ட இலங்கை கிரிக்கெட் வாரியம் வரும் நவம்பர் 1 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை இந்தியாவில் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாட சம்மதம் தெரிவித்துள்ளது.
 
எனினும் இப்போட்டிகளுக்கான தேதி, இடம் ஆகியவற்றை இந்திய கிரிக்கெட் வாரியம் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. வருகிற 21 ஆம் தேதி நடைபெறும் செயற் குழுவில் இப்போட்டிக்கான அட்டவணை அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
 
இந்நிலையில் கட்டாக் போட்டிக்கான டிக்கெட் விற்பனையை ஒடிசா கிரிக்கெட் சங்கம் இன்று அக், 19 தொடங்கியது. மேலும் இந்தியா-இலங்கை அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி கட்டாக்கில் நவம்பர் 2 ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

வலுவான ராஜஸ்தானை எதிர்கொள்ளும் முன்னணி வீரர்கள் இல்லாத பஞ்சாப்… டாஸ் அப்டேட்!

சிறுமி வன்கொடுமை வழக்கு.. நிரபராதியான சந்தீப் லமிச்சேனே! – உலகக்கோப்பையில் நடக்கும் அதிரடி மாற்றம்!

சிஎஸ்கே, ஆர்சிபி அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமானால் என்ன நடக்க வேண்டும்?

RCB க்கு எதிரான போட்டியில் நான் விளையாடியிருந்தால் ப்ளே ஆஃப் வாய்ப்பு எளிதாகி இருக்கும்- ரிஷப் பண்ட் வேதனை!

இவரு கேட்ச் பிடிக்க… அவரு எழுந்து கைதட்ட ஒரே கூத்துதான்… கோயங்காவின் நண்பேண்டா மொமண்ட்!

Show comments