Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவை வீழ்த்தி உலகக் கோப்பையை வெல்வோம் - யூனிஸ் கான்

Webdunia
வெள்ளி, 16 ஜனவரி 2015 (11:05 IST)
இந்தியாவை வீழ்த்தி உலகக்கோப்பையை வெல்வோம் என பாகிஸ்தான் அணியின் மூத்த வீரர் யூனிஸ் கான் கூறியுள்ளார்.
 
இதுபற்றி யூனிஸ் கான் கூறுகையில், 'வரலாறு மாற்றியமைக்கப்பட வேண்டும். இந்த முறை நாங்கள் அடிலெய்டில் நடக்கும் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி உலகக்கோப்பையை வெல்வோம். விதியை மாற்றுவோம்.
 

 
அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியதைப் போலவே, இந்த உலகக்கோப்பைப் போட்டியிலும் ரசிகர்களிடம் ஆச்சர்யம் எழும். நிறைய வீரர்கள் பேர் எங்கள் அணியில் நல்ல நிலையில் இருக்கிறார்கள்.
 
அவர்கள் ஒவ்வொருவரும் திறமையாகவும், பொறுப்பாகவும் விளையாடினால் நிச்சயமாக இந்தியாவை வீழ்த்தி விடலாம். ஆனால், இந்த முறை யார் கோப்பையை வெல்வார்கள் என குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. ஏனெனில் சமீபகாலங்களாக ஒருநாள் போட்டிகள் மாறிவிட்டன. எனவே இந்த முறை யார் வேண்டுமானாலும் சாம்பியனாக முடியும்.
 
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதை பற்றி இப்போது நான் சிந்திக்கவில்லை. நான் இன்னும் விளையாடுவதை ரசிக்கிறேன். என்னுடைய வாழ்க்கையில் இன்னும் சிறந்த காலங்கள் இருக்கிறது. சர்வதேச போட்டியில் சாதனை படைக்கும் வாய்ப்பை முடித்துக் கொள்ள விரும்பவில்லை. ஓய்வு பெறுவது எனது தனிப்பட்ட முடிவு" என தெரிவித்துள்ளார்.
 
உலகக்கோப்பை வரலாற்றில் இதுவரை ஒரு முறை கூட பாகிஸ்தான் அணி இந்தியாவை வீழ்த்தியது  கிடையாது.

அதிரடி காட்டிய ஆர்சிபி.. ப்ளே ஆப் வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஆர் சி பி அணி நிர்ணயித்த இமாலய இலக்கு… எட்டிப்பிடிக்குமா சி எஸ் கே?

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

Show comments