ஐபிஎல் சீசனில் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சன்ரைசர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
இந்த சீசன் தொடங்கியபோது முதல் போட்டியிலேயே அதிரடி காட்டி ஆச்சர்யப்படுத்திய அணிகள் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத். அதே நிலை தொடர்ந்திருந்தால் இன்றைய போட்டி பெரிதும் எதிர்பார்க்கக்கூடிய ஒரு போட்டியாக இருந்திருக்கும். ஆனால் இரு அணிகளுமே மோசமான தோல்விகளை கண்டு புள்ளி பட்டியலில் கடைசியில் உருண்டுக் கொண்டிருக்கின்றன.
இரு அணிகளுமே 8 போட்டிகளில் 2ல் மட்டும் வென்று 4 புள்ளிகளுடன் கடையில் இருக்கின்றன. ப்ளே ஆப் தகுதி பெற வேண்டுமென்றால் இனி வரும் போட்டியெல்லாம் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இரு அணிகளும் உள்ளன. ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே இதுவரை கடைசி இடத்தில் இருந்து சீசனை முடித்ததில்லை. அதனால் அதற்கான போராட்டத்தில் சென்னை அணி இறங்கும்.
மேலும் வரலாற்றில் இதே நாளில் 2010ம் ஆண்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை அணியை வீழ்த்தி முதல் முறையாக கோப்பையை வென்றது. அந்த சீசனிலும் இதே போல ஆரம்பத்தில் சென்னை அணி பல தோல்விகளை கண்டு பின்னர் வெற்றி படிக்கட்டில் ஏறியது. இன்று அந்த சிறப்பு வாய்ந்த நாளில், இந்த சிசனின் வெற்றி கணக்கை சிஎஸ்கே தொடங்குமா என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.
Edit by Prasanth.K