ஆஷஸ் தொடர்… மூன்றாம் நாள் ஆட்டத்தில் ஆஸி அணி தடுமாற்றம்!

Webdunia
சனி, 8 ஜூலை 2023 (08:34 IST)
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் ஆஷஸ் தொடர் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜூலை 6ஆம் தேதி தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 60 ஓவர்களில் 263 ரன்கள் ஆட்டம் இழந்தது. மிட்செல் மார்ஷ் மிக அபாரமாக விளையாடி சதம் அடித்தார்.  இங்கிலாந்து அணியின் மார்க் வுட் அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்களை சாய்த்தார்.

இதையடுத்து ஆடிய இங்கிலாந்து அணியும் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து ரன்களைக் குவிக்க தடுமாறியது. இங்கி. அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மட்டும் அபாரமாக விளையாடி அதிகபட்சமாக 80 ரன்கள் சேர்த்தார். முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 237 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஆஸி அணி 25 ரன்கல் முன்னிலை பெற்றது.

தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை ஆடிவரும் ஆஸி அணி தற்போது மூன்றாம் நாள் முடிவில் 4 விக்கெட்களை இழந்து 116 ரன்கள் சேர்த்துள்ளது. இங்கிலாந்து அணி சார்பில் மொயின் அலி 2 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப தடை.. வங்கதேசம் அதிரடி உத்தரவு..!

விஜய் ஹசாரே கோப்பை தொடரில் ருதுராஜ் கெய்க்வாட், அதிவேகமாக 100 சிக்ஸர்களை விளாசி புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

சர்வதேச டி20 லீக் தொடர்: சாம் கரண் தலைமையிலான அணி அபார வெற்றி..

ஐபிஎல் தொடரில் தமிழக வீரர் சாய் சுதர்சன் விளையாடுவது சந்தேகமா? என்ன நடந்தது?

வங்கதேச வீரர் ஐபிஎல் போட்டியில் விளையாட அனுமதி இல்லையா? பிசிசிஐ கூறுவது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments