Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''தோனி போல் ஒரு கேப்டன் இனி வரப்போவதில்லை''- முன்னாள் வீரர் பாராட்டு

Webdunia
திங்கள், 17 ஏப்ரல் 2023 (15:39 IST)
ஐபிஎல் -2023, 16வது சீசன் இந்தியாவில் நடைபபெற்று வருகிறது. இதில், 10 அணிகள் இடம்பெற்றுள்ள நிலையில், விறுவிறுப்பாக போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
 

சமீபத்தில், சென்னையில் நடைபெற்ற  17 வது லீக் போட்டியில்   சென்னை சூப்பர் கிங்ஸ்  அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக  விளையாடியது .

இந்தப் போட்டி சென்னை கிங்ஸ் அணியின் கேப்டன் தோனிக்கு 200 வது போட்டியாகும். இதுவரை தோனி தலைமையிலான சென்னை அணி 199 போட்டிகளில்,120ல் வெற்றியும், 78 தோல்வியும், 1 போட்டியில் முடிவு எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தோனி இன்னும் எத்தனை ஆண்டுகள் ஐபிஎல் போட்டியில் விளையாடுவார் என்று தெரியவில்லை.

இந்த ஆண்டுடன் தோனி  ஓய்வு பெறுவார் என்ற தகவல்களும் பரவி வந்த நிலையில், சென்னை அணியின் சி.இ.ஓ தோனி தொடர்ந்து சென்னை அணிக்காக விளையாடுவார் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், வர்ணனையாளருமான சுனிஸ் கவாஸ்கர்,'' கடினமான  நேரங்களில் இருந்து எப்படி மீள்வது என்பது சிஎஸ்கே அணிக்குத்தான் தெரியும். அது தோனி கேப்டனக இருந்தால் மட்டுமே முடியும்.  தோனி 200 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ளார்.  இது கடினமானது.  கேப்டனாக இருப்பவர்களுக்கு தனிப்பட்ட செயல்திறன் பாதிக்கும்.ஆனால், தோனி போல் ஒரு கேப்டன் இல்லை, இனிமேலும் வரப்போவதில்லை'' என்று பாராட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் ஷர்மாவின் முடிவைக் கடுமையாக விமர்சித்த சுனில் கவாஸ்கர்!

தங்கம் வென்ற வீராங்கனை ஒரு ஆண்! வெளியான மருத்துவ ரிப்போர்ட்! - பதக்கத்தை திரும்ப பெறுமா ஒலிம்பிக்ஸ் கமிட்டி?

நான்கு சீனியர்களில் இரண்டு பேருக்குக் குறி… பார்டர் கவாஸ்கர் தொடர்தான் கடைசியா?

கே எல் ராகுலே மோசம்… கோலியும் ரோஹித்தும் அவர விட மோசம்… இது என்னப்பா புது கணக்கா இருக்கே!

இந்திய அணியில் கம்பீரின் அதிகாரத்தைக் குறைக்க முடிவு?

அடுத்த கட்டுரையில்
Show comments