Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் - மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 12 ஜூலை 2016 (13:45 IST)
வீராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக மேற்கிந்திய தீவுகள் சென்றுள்ளது.


இந்தியா- மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் வருகிற 21-ந்தேதி ஆண்டிகுவாவில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 22-ந்தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணிக்கு ஹோல்டர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

விக்கெட் கீப்பரும், முன்னாள் தலைவருமான டேனிஷ் ராம்தின் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் சமீபத்தில் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியத்தை விமர்சித்ததால், அவர் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டுள்ளார்.
புதுமுக வீரர் ரோஸ்டன் சேஸ் அணிக்கு தேர்வாகி உள்ளார். இதேபோல லியான் ஜான்சனும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் 12 பேர் கொண்ட மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் பட்டியல்:-

ஜேசன் ஹோல்டர் (தலைவர்), கிரேக் பிராத் வெயிட் (துணைத் தலைவர்), சாமுவேல்ஸ், ரோஸ்டன் சேஸ், டாரன் பிராவோ, லியான் ஜான்சன், பிளாக் வுட், கார்லோஸ் பிராத் வெயிட், ராஜேந்திர சந்திரிகா, ஷான் டவ்ரிச் (விக்கெட் கீப்பர்), கேப்ரியல், தேவேந்திர பிஷூ.
 

18 ரன்கள்.. 18 ஓவர்.. 18ம் தேதி.. 18ம் ஜெர்சி! 18க்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா? – வரலாறு காணாத CSK vs RCB போட்டிக்கு தயாரா?

வலைப்பயிற்சியில் ஆச்சர்யப்படுத்திய தோனி… ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டிக்கு 100 சதவீதம் தயார்!

தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார்… முன்னாள் சி எஸ் கே வீரர் நம்பிக்கை!

எளிதாக ப்ளே ஆஃப் சென்ற SRH… ஆர் சி பி& சி எஸ் கே அணிகளுக்கு வாழ்வா சாவா போட்டி!

கைவிடப்பட்ட போட்டி… எளிதாக ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற ஐதராபாத்!

அடுத்த கட்டுரையில்
Show comments