Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெஸ்ட் தரவரிசை பட்டியல்..! 15-வது இடத்துக்கு முன்னேறினார் ஜெய்ஸ்வால்.!டெஸ்ட் தரவரிசை பட்டியல்..! 15-வது இடத்துக்கு முன்னேறினார் ஜெய்ஸ்வால்.!

Senthil Velan
புதன், 21 பிப்ரவரி 2024 (16:56 IST)
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இரண்டு இரட்டை சதங்கள் அடித்ததன் மூலம் ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 14 இடங்கள் முன்னேறி 15வது இடத்தை பிடித்துள்ளார். 
 
இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் 434 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பதிவுசெய்த இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என முன்னிலை பெற்றுள்ளது. 
 
இந்த டெஸ்ட் தொடரில் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், அடுத்தடுத்து இரண்டு இரட்டை சதங்கள் அடித்து சாதனை படைத்தார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து 3வது டெஸ்ட் போட்டியின் முடிவுக்கு பிறகு தற்போது, ஐசிசி தரவரிசை பட்டியலை அறிவித்துள்ளது.

அந்த தரவரிசை பட்டியலில் 3வது போட்டிக்கு முன் டெஸ்ட் ரேங்கிங்கில் 29 வது இடத்திலிருந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால், 3வது போட்டியில் இரட்டை சதம் விளாசியதை தொடர்ந்து 14 இடங்கள் முன்னேறி 15வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார். இதன்மூலம் 699 ரேட்டிங் புள்ளிகளுடன் தன்னுடைய உச்சபட்ச இடத்தை யஷஸ்வி பெற்றுள்ளார்.
 
இந்திய வீரர்களில் ரோகித் சர்மா ஒரு இடம் முன்னேறி 12வது இடத்தையும், இங்கிலாந்து வீரர்களில் பென் டக்கெட் அசத்தலான சதத்திற்கு பிற்கு 25வது இடத்திலிருந்து 12 இடங்கள் முன்னேறியுள்ளார். 

ALSO READ: பட்டாசு வெடி விபத்து..! மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. அறிக்கை தர உத்தரவு.!!
 
இந்திய பேட்ஸ்மேன்களில் அதிகபட்சமாக டெஸ்ட்டில் கோலி 7வது இடத்திலும், ஒருநாள் கிரிக்கெட்டில் சுப்மன் கில் 2வது இடத்திலும், டி20-ல் சூர்யகுமார் யாதவ் முதல் இடத்திலும் நீடிக்கின்றனர். பும்ரா நம்பர் 1 டெஸ்ட் பவுலராகவும், ஜடேஜா நம்பர் 1 ஆல்ரவுண்டராகவும் தொடர்ந்து வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜாகீர் கானை பாக்குற மாதிரியே இருக்கு! சிறுமி பந்து வீசும் வீடியோவை ஷேர் செய்த சச்சின் டெண்டுல்கர்!

சாம்பியன்ஸ் ட்ராபி விவகாரம்; பாகிஸ்தானுக்கு ரூ.38 கோடி வழங்கும் ஐசிசி! - ஆகாஷ் சோப்ரா கடும் விமர்சனம்!

துப்பாக்கிய பிடிங்க வாஷி… உங்க பேச்சுதான் பெஸ்ட்டு… அஸ்வின் நெகிழ்ச்சி!

கோலி மட்டும் கேப்டனாக இருந்தால் அஸ்வினை விட்டிருக்க மாட்டார்… பாகிஸ்தான் வீரர் கருத்து!

25 வருடத்துக்கு முன்பு யாராவது இதை சொல்லியிருந்தால்..?- அஸ்வின் நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments