Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி...2021 -ல் ஜூன் மாதத்தில் நடக்கும் - ஐசிசி திட்டவட்டம் !

Webdunia
புதன், 14 அக்டோபர் 2020 (19:07 IST)
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி அடுத்தாண்டு ஜூன் மாதம் லண்டனில் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக ஐசிசி கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது.  இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

இதுவரை உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி, டி-20 கோப்பை, ஆசியக் கோப்பை,சாம்பியன் ஷிப் கோப்பை  போன்ற தொடர்களே நடந்துள்ள நிலையில், முதன்முதலாக உலகக் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டிகள் 9 அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது.

இந்த டெஸ்ட் தொடர்கள் சாம்பியன்ஷிப் போட்டி கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு அதற்கு ஏற்ப புள்ளிகள் வழங்கப்படுகிறது.

இதன்படி ஒவ்வொரு அணியும் 6 தொடர்களில் பங்கேற்று விளையாட வேண்டும். அதேசயம கொரொனா பரவல் காரணமாக உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஒத்தி வைக்க வேண்டுமெனக்  கோரிக்கை விடுக்கப்பட்டது. எனவே வரும் 2021 ஆம் ஆண்டு  ஜூன் மாதம் லண்டனில் இறுதிப் போட்டிகள் நடைபெறும் என்று ஐசிசி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments