Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சச்சின் டெண்டுல்கர் - ஷேன் வார்னே மோதும் டி 20 அமெரிக்காவில் நடைபெறுகிறது

சச்சின் டெண்டுல்கர் - ஷேன் வார்னே மோதும் டி 20 அமெரிக்காவில் நடைபெறுகிறது
, செவ்வாய், 6 அக்டோபர் 2015 (15:29 IST)
சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான அணியும், ஷேன் வார்னே தலைமையிலான அணியும் மோதும் டி 20 நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடைபெறவிருக்கிறது.
 

 
இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான ”சச்சின் பிளாஸ்டர்ஸ்”  [Sachin's Blasters] அணியும், ஆஸ்திரேலியாவின் சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்னே தலைமையிலான “வார்னே’ஸ் வாரியர்ஸ்” [Warne's Warriors] அணியும் மோதுவுள்ளன.
 
இந்த போட்டியில், பிரையன் லாரா, வாசிம் அக்ரம், சவுரவ் கங்குலி, விவிஎஸ் லக்‌ஷ்மணன், அஜித் அகர்கர், ரிக்கி பாண்டிங், மேத்யூ ஹைடன், கிளைன் மெக்ரத், அனில் கும்ப்ளே, ஆடம் கில்கிறிஸ்ட், பிரட் லீ, ஷாகித் அஃப்ரிடி, சானத் ஜெயசூர்யா உள்ளிட்ட வீரர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
 
மூன்ற போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி நவம்பர் மாதம் 7ஆம் தேதி நியூயார்க் நகரில் உள்ள சிட்டி ஃபீல்ட் மைதானத்திலும், 2ஆவது போட்டி நவம்பர் 11ஆம் தேதி ஹாஸ்டன் நகரிலுள்ள மினிட் மெய்ட் பார்க்கிலும், 3ஆவது போட்டி நவம்பர் 14ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள டாட்ஜர் மைதானத்திலும் நடைபெற உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil