Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் துணைக் கேப்டன் ஆன பும்ரா… நியுசிலாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

vinoth
சனி, 12 அக்டோபர் 2024 (07:12 IST)
வங்கதேச அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற வெற்றிக் கணக்கில் நிறைவு செய்தது இந்திய அணி. இதையடுத்து தற்போது வங்கதேச அணிக்கெதிரான டி 20 தொடரில் ஆடிவருகிறது. இந்த தொடர் முடிந்ததும் நியுசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடர் அக்டோபர் 16 ஆம் தேதி தொடங்குகிறது.

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை நியுசிலாந்து அணி 0-2 என்ற கணக்கில் இழந்தது. இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 6 ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்த தொடருக்கான நியுசிலாந்து அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் அதில் முதல் போட்டியில் மட்டும் கேன் வில்லியம்சன் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் சர்பராஸ் கான் அணிக்குத் திரும்பியுள்ளார். அதே போல பும்ரா வசம் துணைக் கேப்டன் பொறுப்பு மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி
யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோஹித் ஷர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, ரிஷப் பண்ட், சர்பராஸ் கான்,  கே எல் ராகுல், துருவ் ஜுரெல், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்தர ஜடேஜா, அக்ஸர் படேல்,  குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஆகாஷ் தீப், பும்ரா (துணைக் கேப்டன்).

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு உறுப்பினராக பொறுப்பேற்ற முன்னாள் நடுவர்!

தெலங்கானா காவல்துறையில் DSP பொறுப்பு… சிராஜுக்குக் கிடைத்த கௌரவம்!

மீண்டும் துணைக் கேப்டன் ஆன பும்ரா… நியுசிலாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறை… இங்கிலாந்து அணி படைத்த சாதனை!

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்.. இங்கிலாந்து இன்னிங்ஸ் வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments