Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆஸ்திரேலிய சிட்னி மைதானத்தின் 7 ஆவது பிட்சுக்கு ஓய்வு: சிட்னி கிரிக்கெட் சங்கம்

ஆஸ்திரேலிய சிட்னி மைதானத்தின் 7 ஆவது பிட்சுக்கு ஓய்வு: சிட்னி கிரிக்கெட் சங்கம்
, சனி, 6 டிசம்பர் 2014 (09:13 IST)
ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் ஹியூக்ஸ் பவுன்சர் பந்து தாக்கி உயிரிழந்ததால், இனி அம்மைதானத்தின் 7 ஆவது பிட்ச்சை பயன்படுத்துவதில்லை என சிட்னி கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது. 
பவுன்சர் பந்துவீச்சில் தலையில் படுகாயமடைந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஹியூக்ஸ், சிகிச்சை பலனின்றி சில தினங்களுக்கு முன் உயிரிழந்தார். இதனால் ஆஸ்திரேலிய அணி வீரர்களும், மற்றும் ஹியூக்ஸின் குடும்பத்தினரும் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். 
 
இந்நிலையில் சிட்னி மைதானத்தின் 7 ஆவது பிட்சுக்கு ஓய்வு அளிக்கப்படுவதாக சிட்னி கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து பிட்ச் பராமரிப்பாளர் டாம் பார்க்கர் கூறுகையில், ஆஸ்திரேலிய சிட்னி மைதானத்தில் 10 பிட்ச்கள் உள்ளன. இதில் 7 ஆவது பிட்ச்சில்தான் ஹியூக்ஸின் சோக நிகழ்வு அரங்கேறியது. இந்த துயர சம்பவத்தை எளிதில் யாராலும் மறக்க முடியாது. மேலும் நான் தயாரித்த பிட்ச்சில் யாரும் ரத்தத்தை சிந்த நான் விரும்ப மாட்டேன். எனவே இனி இந்த பிட்ச்சை மீண்டும் பயன்படுத்தபோவதில்லை என்ற முடிவுக்கு வந்து இருக்கிறோம் என கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil