Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக் கோப்பையில் இந்திய அணியில் சூர்யகுமாருக்கு இடமில்லை… முன்னாள் வீரர் அதிரடி கருத்து!

Webdunia
புதன், 2 ஆகஸ்ட் 2023 (09:11 IST)
கடந்த சில ஆண்டுகளாக டி 20 போட்டிகளில் அசுர பார்மில் இருந்து ரன்மெஷினாக வலம் வந்த சூர்யகுமார் யாதவ். அதையடுத்து அவருக்கு ஒருநாள் போட்டிகளில் வாய்ப்புகள் வழங்கப்பட்டன. ஆனால் அவர் அந்த பார்மட்டில் தொடர்ந்து சொதப்பி வருகிறார். இப்படி சொதப்புவதால், அவர் டி 20 போட்டிகளுக்கு மட்டுமே ஸ்பெஷலிஸ்ட் வீரராக உள்ளாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில் இப்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளிலும் “மோசமாக விளையாடி வரும் அவருக்கு இறுதி ஒருநாள் போட்டியிலும் வாய்ப்பு வழங்கப்படும், ஆனால் அதுவே கடைசி வாய்ப்பாக அமையும்” என முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இதே போன்ற கருத்தை முன்னாள் வீரரும் விமர்சகருமான ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். தொடர்ந்து சொதப்பி வரும் அவருக்கு இந்திய அணியில் உலகக்கோப்பை தொடரில் இடமில்லை என அவர் கூறியுள்ளார். காயத்தால் அணியில் இருந்து விலகியுள்ள ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கே எல் ராகுல் ஆகியோர் அணிக்கு திரும்பும் பட்சத்தில் சூர்யகுமார் யாதவ் வெளியேற வேண்டிய சூழல் உருவாகும். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை ஐந்தாவது டெஸ்ட்… ஓவல் மைதானத்தில் இந்திய அணியின் சோக வரலாறு!

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட்… அறிமுகம் ஆகிறாரா அர்ஷ்தீப் சிங்?

ஒரே தொடர்தான்… சராசரியில் ஏற்றம் கண்ட ஷுப்மன் கில்!

கம்பீரைத் தூக்கினால் விராட் கோலி மீண்டும் வருவார்… யோக்ராஜ் சிங் கருத்து!

ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா இல்லையா?.. கடைசி நேரத்தில் அதிர்ச்சி செய்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments