மும்பை இந்தியன்ஸ் அணிக்குக் கேப்டனாகும் சூர்யகுமார் யாதவ்..!

vinoth
புதன், 19 மார்ச் 2025 (14:58 IST)
22ம் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் நிலையில் 23ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதும் முதல் போட்டி நடைபெற உள்ளது. ஐபிஎல் வரலாற்றில் Great Rivalry போட்டியாக கருதப்படும் இந்த போட்டியை காண ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.

இந்த போட்டிக்கான மும்பை அணியில் ஏற்கனவே காயம் காரணமான நட்சத்திர வீரர் ஜஸ்ப்ரீத் பும்ரா ஆடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவும் விளையாட மாட்டார். கடந்த சீசனில் மூன்று போட்டிகளில் மெதுவான வேகத்தில் பந்து வீசியதால் அவருக்கு இந்த சீசனின் முதல் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்த முதல் போட்டியில் மும்பை அணியை சூர்யகுமார் யாதவ் வழிநடத்துவார் என ஹர்திக் பாண்ட்யா அறிவித்துள்ளார். இந்திய அணிக்கு கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக சூர்யகுமார், 20 ஓவர் கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக சிறப்பாக செயல்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கைகுலுக்கல் விவகாரம்.. நடுவர் மேல் புகாரளித்த PCB.. நிராகரித்த ஐசிசி!

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சி ஸ்பான்சர் யார்? பி.சி.சி.ஐயின் புதிய முடிவு

ஆசிய கோப்பை போட்டியில் இருந்து விலகுவோம்: பாகிஸ்தான் அணி மிரட்டல்..!

முதல் ஆளாக சூப்பர் நான்கு சுற்றுக்குத் தகுதி பெற்ற இந்திய அணி!

விளையாட்டில் அரசியலைக் கொண்டு வருவது அறம் இல்லாதது… பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் அதிருப்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments