Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இருளின் முடிவில் நிச்சயம் வெளிச்சம் வரும்… ஆஸி தொடர் குறித்த நம்பிக்கையோடு சூர்யகுமார்!

Webdunia
வியாழன், 23 நவம்பர் 2023 (07:14 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று முதல் தொடங்குகிறது. இந்த நிலையில் இந்த போட்டிக்கான இரு அணிகளும் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இரு அணிகளிலும் சீனியர் வீரர்கள் விலக்கப்பட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்திய அணிக்கு முதல் மூன்று போட்டிகளுக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று இந்திய அணியினருடன் இணைந்த அவர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் இளம் வீரர்கள் கொண்ட அணி குறித்து மிகவும் நம்பிக்கையோடு பேசியுள்ளார்.

அதில் “உலகக் கோப்பை தோல்வியில் இருந்து அடுத்த நாளே வெளிவருவது எளிதில்லை. நாங்கள் அந்த தொடரில் பெருமை பட கொள்ளத்தக்க வகையில்தான் விளையாடினோம். ஆனால் நாளையும் சூரியன் உதிக்கும். நிச்சயம் இருளின் முடிவில் வெளிச்சம் வரும். நாம் அந்த தோல்வியில் சிக்கிக் கொள்ளாமல் அடுத்த கட்டத்துக்கு நகரவேண்டும். இளம் வீரர்கள் கொண்ட அணியோடு களமிறங்குவதால் சவாலை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

“நான் டாஸ் போட வரும்போது…” –மும்பை ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்த ஹர்திக்!

கோலியின் சகவீரர் நடுவராக ஐபிஎல் 2025 சீசனில் அறிமுகம்..!

சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு 58 கோடி ரூபாய் பரிசறிவித்த பிசிசிஐ!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குக் கேப்டன் ஆகும் ரியான் பராக்… சஞ்சு சாம்சனுக்கு என்ன ஆச்சு?

வெளிநாட்டுத் தொடரில் வீரர்களுடன் குடும்பத்தினர் தங்கும் கட்டுப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.. பிசிசிஐ தடாலடி!

அடுத்த கட்டுரையில்
Show comments