Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அங்க சிஎஸ்கே கப்பல் மூழ்குது; இது நியாயமா தலைவரே! – ரெய்னாவால் ரசிகர்கள் சோகம்

Webdunia
சனி, 24 அக்டோபர் 2020 (09:25 IST)
நேற்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே அணி படுதோல்வி அடைந்த நிலையில் சுரேஷ் ரெய்னா டிவிட்டரில் பதிவிட்டுள்ளது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த ஐபிஎல் சீசனில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சிஎஸ்கே அணி முதன்முறையாக ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்துள்ளது பலருக்கு அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சீசனில் சிஎஸ்கே அணியில் இருக்க வேண்டிய சுரேஷ் ரெய்னா அணியில் இல்லாமல் வெளியேறியது ஒரு பெரும் குறையாக கருதப்படுகிறது.

இந்நிலையில் ஒவ்வொரு முறை சிஎஸ்கே அணி தோல்வி அடையும்போது ரெய்னா எங்காவது சுற்று பயணம் சென்ற போட்டோக்களை ட்விட்டரில் பகிர்ந்து வருகிறார். அதுபோல நேற்று சிஎஸ்கே அணி தோற்ற நிலையில் இன்று அவர் நவராத்திரி வாழ்த்துக்கள் சொல்லி தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

அங்க நம்ம டீம் தோக்குது நீங்க இங்க ஜாலியா நவராத்திரி கொண்டாடுறீங்களே.. இது நியாயமா தலைவரே என்ற ரீதியில் சிஎஸ்கே ரசிகர்கள் சிலர் அவரது கமெண்டில் புலம்பி வந்தாலும், நீங்களாவது சந்தோசமா விழாவை கொண்டாடுங்க என சிலர் வாழ்த்தியும் வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சச்சினின் முக்கியமான சாதனையைத் தகர்த்த ஜோ ரூட்!

என்னை சுற்றி எழுந்துள்ள சர்ச்சைகளைக் கண்டுகொள்வதில்லை… வைபவ் சூர்யவன்ஷி பதில்!

சாம்பியன்ஸ் கோப்பையை ஹைபிரிட் மாடலில் நடத்த ஒத்துக்கொண்ட பாகிஸ்தான்… வைத்த நிபந்தனைகள் இதுதான்!

ரோஹித் வந்தால் கே எல் ராகுல் எங்கு இறங்கவேண்டும்?.. புஜாரா சொல்லும் ஆலோசனை!

இந்தியில் சமூகவலைதளக் கணக்குகள்… ரசிகர்களிடம் எதிர்ப்பை சம்பாதிக்கும் RCB!

அடுத்த கட்டுரையில்
Show comments