Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சி எஸ் கே வில் ஜடேஜாவுக்கு பதில் ரெய்னாவா?

Webdunia
வியாழன், 18 ஆகஸ்ட் 2022 (15:18 IST)
ஜடேஜா அடுத்த ஆண்டு சி எஸ் கே அணிக்காக விளையாட மாட்டார் என சொல்லப்படும் நிலையில் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்கிய போது ஜடேஜா அளவுக்கு யாருமே மகிழ்ச்சியாக இருந்திருக்க மாட்டார்கள். சென்னை அணியை வழிநடத்தும் பெருமிதத்தோடு களமிறங்கியிருப்பார். ஆனால் அவரின் தனிப்பட்ட மோசமான ஃபார்ம் காரணமாகவும், சி எஸ் கே அணியின் தொடர் தோல்வி காரணமாகவும் கடுமையாக விமர்சிக்கப்பட்ட நிலையில் கேப்டன் பதவியை மீண்டும் தோனியிடம் ஒப்படைத்தார்.

இந்த ஆண்டு சீசனில் கடைசி சில போட்டிகளில் இருந்து ஜடேஜா விலகினார். இது சம்மந்தமாக சி எஸ் கே அணி நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில் “ ஜடேஜாவுக்கு பில்டிங்கின் போது தோள்பட்டையில் காயம் ஏற்பட்ட காயத்தை அவர் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டார். ஆனால் அவரின் காயத்தில் முன்னேற்றம் இல்லாததால் அவர் இந்த தொடரில் இருந்து விலகுகிறார். அவர் சீக்கிரம் திரும்பி வருவார் என்ற நம்பிக்கை உள்ளது” எனக் கூறி இருந்தது.

ஆனால் மற்றொரு பக்கத்தில் ஜடேஜாவை சமூகவலைதளத்தில் பின் தொடர்வதை சி எஸ் கே அட்மின் பக்கம் நிறுத்தியது. ஏற்கனவே இதுபோலதான் ரெய்னா ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய போதும் அவரை முதலில் அன் பாலோ செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து ஜடேஜா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சி எஸ் கே அணி தொடர்பான தனது பதிவுகள் சிலவற்றை நீக்கினார்.

இந்நிலையில் இப்போது ஜடேஜா மீண்டும் சி எஸ் கே அணிக்காக விளையாடமாட்டார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இந்நிலையில் அவரை டிரேடிங் விண்டோ மூலமாக வேறு சில அணிகள் ஏலத்தில் எடுக்க முயன்று வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் சென்னை அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவை ஜடேஜாவுக்கு பதில் எடுக்கலாமா என சென்னை அணி ஆலோசித்து வருவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவரும் உடல் தகுதியோடு உள்ளனர்… கம்பீர் கொடுத்த அப்டேட்… இறுதிப் போட்டியில் விளையாடுவாரா பும்ரா?

இங்கிலாந்து தொடரோடு டெஸ்ட் போட்டிகளில் ஓய்வா?... பும்ரா பற்றி பரவும் தகவல்!

மகளிர் உலக கோப்பை செஸ் சாம்பியன் ஆனார் திவ்யா தேஷ்முக்.. குவியும் வாழ்த்துக்கள்..!

முக்கியமான போட்டிகளில் 10 வீரர்களோடு விளையாடுவது பின்னடைவு!… ஐசிசிக்குக் கம்பீர் வேண்டுகோள்!

நம் முடியெல்லாம் நரைப்பதற்கு மரியாதையே இல்லை… கெவின் பீட்டர்சனைக் காட்டமாக விமர்சித்த அஸ்வின்!

அடுத்த கட்டுரையில்
Show comments