தன் சாதனையை தானே முறியடித்த சன்ரைசர்ஸ்..! அதிரடி சரவெடி ஆட்டம்! – டார்கெட்டை பார்த்து ஆடி போன RCB!

Prasanth Karthick
திங்கள், 15 ஏப்ரல் 2024 (21:26 IST)
இன்றைய ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் – ஆர்சிபி அணிகள் மோதிக் கொண்ட நிலையில் சன்ரைசர்ஸ் ஐபிஎல்லில் அதிகமான ரன்களை அடித்து புதிய சாதனை படைத்துள்ளது.



டாஸ் வென்ற ஆர்சிபி பவுலிங் தேர்வு செய்தும் ரன்களை கன்ண்ட்ரோல் செய்ய முடியவில்லை. அபிஷேக் சர்மாவை அவுட் செய்யவே 8வது ஓவர் வரை பயணிக்க வேண்டியிருந்தது.

இதற்கிடையே அதிரடி ஆட்டக்காரர் ட்ராவிஸ் ஹெட் சிக்ஸரும், பவுண்டரிகளுமாக பறக்கவிட்டு 41 பந்துகளில் 102 ரன்களை குவித்தார். அவர் அவுட்டாகி சென்றாலும் க்ளாசன் (67 ரன்கள்) அரைசதம் வீழ்த்தினார். க்ளாசனுக்கு பிறகு களம் இறங்கிய எய்டன் மர்க்ரம் (32 ரன்கள்), அப்துல் சமத் (37 ரன்கள்) அதிரடியாக ஆடி ரன்களை குவித்தனர்.

ALSO READ: ட்ராவிஸ் ஹெட் அதிரடி சதம்.. க்ளாசன் அரைசதம்! கலக்கத்தில் ஆர்சிபி!

சில நாட்கள் முன்பு மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக சன்ரைசர்ஸ் அடித்த 277 ரன்கள் ஐபிஎல்லின் அதிகபட்ச ஸ்கோராக சாதனை படைத்து ஆர்சிபியின் சாதனையை முறியடித்தது. இன்று சன்ரைசர்ஸ் ஆர்சிபியையே அடித்து 287 ரன்களை குவித்து தனது சாதனையை நடப்பு சீசனிலேயே முறியடித்து புதிய சாதனையை படைத்துள்ளது.

தற்போது 288 என்ற டார்கெட்டை நோக்கி ஆர்சிபி களம் இறங்குகிறது. இந்த ரன்னை ஆர்சிபி சேஸ் செய்ய முடியுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2வது இன்னிங்ஸில் இங்கிலாந்து ஆல்-அவுட்.. ஆஸ்திரேலியா வெற்றி பெற டார்கெட் எவ்வளவு?

2வது நாளே 2வது இன்னிங்ஸ்.. இன்று அல்லது நாளை முடிந்துவிடுமா ஆஷஸ் முதல் டெஸ்ட்..!

கௌகாத்தி டெஸ்ட்… டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா எடுத்த முடிவு!

ஒரே நாளில் அதிக விக்கெட்கள்… ஆஸ்திரேலியாவுக்கு ஒரு நீதி.. இந்தியாவுக்கு ஒரு நீதி- அஸ்வின் காட்டம்!

பந்துவீச்சில் பதிலடி கொடுத்த இங்கிலாந்து.. 9 விக்கெட்டுக்களை இழந்து ஆஸ்திரேலியா தடுமாற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments