இந்தியா பாகிஸ்தான் போட்டி மழையால் பாதிக்கப்பட்டால்… கலக்கத்தில் ஒளிபரப்பு நிறுவனங்கள்!

Webdunia
சனி, 22 அக்டோபர் 2022 (09:13 IST)
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி நாளை மெல்போர்னில் நடக்க உள்ளது.

இந்த உலகக்கோப்பை தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டியாக அக்டோபர் 23 ஆம் தேதி நடக்கும் இந்தியா பாகிஸ்தான் போட்டி கருதப்படுகிறது. இந்த போட்டி மழையால் பாதிக்கப்பட 80 சதவீதம் வாய்ப்புள்ளதாக வானிலை தகவல்க்ள் வெளியாகி கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட் கட்டாணங்கள் அனைத்தும் அறிவித்த சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்துள்ளன.

இந்நிலையில் நேற்று வரை மெல்போர்னில் மழை பெய்துள்ளது. இதனால் போட்டி பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகியுள்ளன. இந்நிலையில் இந்த போட்டி பாதிக்கப்பட்டால் புள்ளிகள் இரு அணிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்படும். அதனால் இந்த போட்டியின் மூலம் விளம்பரங்களின் வாயிலாக வரவேண்டிய தொகை ஒளிபரப்பாளர்களுக்கு பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தும். இந்த போட்டியின் எதிர்பார்ப்பு காரணமாக விளம்பரக் கட்டணம் அதிகளவில் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசிய கோப்பை: வங்கதேச 'ஏ' அணியுடன் இந்தியா 'ஏ' அரையிறுதி மோதல்

46 ஆண்டுகளுக்குப் பிறகு… சாதனை படைத்த நியுசிலாந்து பேட்ஸ்மேன் டேரில் மிட்செல்!

2026 உலகக் கோப்பை கால்பந்து: 42 அணிகள் தகுதி! முழு விவரங்கள்..!

இந்தியா - வங்கதேச மகளிர் கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு! ஷேக் ஹசீனா விவகாரம் காரணமா?

அவர்கள் மேல் கம்பீர் நம்பிக்கை வைக்க வேண்டும்… கங்குலி அட்வைஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments