Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெறித்தன பேட்டிங்.. உலக சாதனைப் படைத்த சன் ரைசர்ஸ் ஐதராபாத்!

vinoth
திங்கள், 24 மார்ச் 2025 (07:19 IST)
நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் சன் ரைசர்ஸ் பேட்ஸ்மேன்கள் ருத்ரதாண்டவம் ஆடினர். இந்த போட்டியில் டாஸ் வென்று ராஜஸ்தான் பவுலிங் எடுத்ததை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அதிரடியாக ரன்களை குவிக்கத் தொடங்கியது. இந்த சீசனில் மும்பை அணியிலிருந்து சன்ரைசர்ஸ் அணிக்கு வந்த இஷான் கிஷன், சன்ரைசர்ஸுக்கான தனது முதல் போட்டியிலேயே 106 ரன்களை அடித்துக் குவித்து அனைவரையும் வாய்ப்பிளக்க செய்துள்ளார்.

அந்த அணியின் டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா, இஷான் கிஷான் மற்றும் கிளாசன் ஆகிய நால்வரின் அதிரடியான ஆட்டத்தால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 286 ரன்களை அடித்துக் குவித்துள்ளது. இது ஐபிஎல் தொடரில் குவிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.

ஏற்கனவே மூன்று 250 ரன்களுக்கு மேல் குவித்துள்ள சன் ரைஸர்ஸ் அணி இந்த போட்டியின் மூலம் உலக சாதனை ஒன்றைப் படைத்துள்ளது. அதிகமுறை 250 ரன்களுக்கு மேல் குவித்த டி 20 அணி என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இரண்டாம் இடத்தில் இந்திய அணி உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜோஃப்ரா அடித்து துவம்சம் செய்த SRH பேட்ஸ்மேன்கள்.. உலகளவில் மோசமான சாதனை!

வெறித்தன பேட்டிங்.. உலக சாதனைப் படைத்த சன் ரைசர்ஸ் ஐதராபாத்!

ருத்துராஜ், ரச்சின் அதிரடி அரைசதம்.. தோனிக்கு பில்டப் பாட்டு- மும்பையை வீழ்த்திய சி எஸ் கே!

ரத்தம் ஒரு சொட்டு மிச்சமிருந்தாலும்.. விடாமுயற்சி! போராடி தோல்வியடைந்த ராஜஸ்தான் ராயல்ஸ்!

சதம் விளாசிய இஷான் கிஷன்.. சொல்லி அடித்த ஐதராபாத்! புதிய ரன் ரெக்கார்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments