Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜிம்பாப்வேயைப் பந்தாடியது தென் ஆப்பிரிக்கா

Webdunia
திங்கள், 1 அக்டோபர் 2018 (18:09 IST)
ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி எளிதாக வெற்றி பெற்றுள்ளது.

ஜிம்பாப்வே அணி தென் ஆப்பிரிக்கா நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கோண்டு மூன்று ஒருநாள் மற்றும் மூன்று இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி வருகிறது. இத்தொடரில் தென் ஆப்பிரிக்காவின் முக்கிய வீரர்களான டூ பிளஸ்சி, ஆம்லா, டீ காக், மில்லர் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. டுமினி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்று தென் ஆப்பிரிக்காவின் கிம்பர்லி நகரில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

பேட்டிங்கைத் தொடங்கிய தொடக்கம் முதலே ரன் குவிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணி 34 ஓவர்கள் முடிவில் 117 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் மஸகட்சா(கேப்டன்) 25 ரன்களும் முன்னாள் கேப்டன் சிக்கும்புரா 27 ரன்களும் அதிகபட்சமாக சேர்த்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க எண்களில் ஆட்டம் இழந்தனர். தென் ஆப்பிரிக்காவின் லுங்கி நெகிடி 3 விக்கெட்களும் ரபாடா 2 விக்கெட்களும் வீழத்தினர்.

பின்னர் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 26.1 ஓவர்கள் முடிவில் 119 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. அந்த அணியின் விக்கெட் கீப்பர் கிளாசன் அதிகபட்சமாக 44 ரன்கள் சேர்த்தார்.

மூன்று விக்கெட் வீழ்த்தி தென் ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த லுங்கி நெகிடி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இவ்விரு அணிகளுக்கு இடையிலான அடுத்தப் போட்டி அக்டோபர் மூன்றாம் தேதி நடைபெற இருக்கிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

களத்தில் நம்மை ஒப்புக்கொடுக்க வேண்டும்.. கோலி குறித்து சஞ்சய் பாங்கர் கருத்து!

பயிற்சியின் போது இடது காலில் காயமான ரோஹித் ஷர்மா… வைரலான புகைப்படம்!

பயிற்சியின் போது காயமடைந்த முன்னணி வீரர்… இந்திய அணிக்குப் பின்னடைவு!

ஜாகீர் கானை பாக்குற மாதிரியே இருக்கு! சிறுமி பந்து வீசும் வீடியோவை ஷேர் செய்த சச்சின் டெண்டுல்கர்!

சாம்பியன்ஸ் ட்ராபி விவகாரம்; பாகிஸ்தானுக்கு ரூ.38 கோடி வழங்கும் ஐசிசி! - ஆகாஷ் சோப்ரா கடும் விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments