Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென் ஆப்பிரிக்காவிடம் மண்ணை கவ்வியது வங்கதேசம்; 52 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி

Webdunia
ஞாயிறு, 5 ஜூலை 2015 (21:08 IST)
தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டி-20 போட்டியில் வங்கதேச அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்துள்ளது.
 

 
வங்கதேசம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா அணி 2 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை மிர்பூரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
 
அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் டி வில்லியர்ஸ் (2), டி காக் (12) இருவரும் ஏமாற்றினர். பின்னர் களமிறங்கிய டு பிளஸ்ஸிஸ் 61 பந்துகளில் 79 ரன்களும், ரோஸ்ஸோவ் 21 பந்துகளில் 31 ரன்களும் குவித்தனர். 20 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 4 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்தது.
 
பின்னர் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து வெளியேறினர். அந்த அணியில் அதிகப்பட்சமாக ஷாகிப் அல் ஹசன் 26 ரன்களும், லிட்டன் தாஸ் 22 ரன்களும் எடுத்தனர்.
 
வங்கதேச அணியில் 8 வீரர்கள் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியில் 18.5 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 96 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 52 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்துள்ளது.
 

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

Show comments