Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோஹித் ஷர்மாவை அதனால்தான் கேப்டன் ஆக்கினேன்… கங்குலி பெருமிதம்!

vinoth
வெள்ளி, 1 மார்ச் 2024 (07:45 IST)
கடந்த 2021 ஆம்  ஆண்டு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, டி 20  கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார். பின்னர் அவர் ஒரு நாள் அணிக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். அதன் பின்னர் அவர் டெஸ்ட் தொடரில் இருந்தும் கேப்டன் பதவியை துறந்தார். இதனால் பிசிசிஐக்கும் கோலிக்கும் இடையே கருத்து மோதல்கள் உள்ளதாக கிசுகிசுக்கப்பட்டன.

மேலும் கோலி கேப்டன் பொறுப்பில் இருந்து நிர்பந்திக்கப்பட்டு விலகியதாகவும் கங்குலி மேல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதன் பின்னர் இந்திய அணிக்குக் கேப்டனாக மூன்று வடிவ போட்டிகளிலும் ரோஹித் ஷர்மா செயல்பட்டு வருகிறார்.

இதுபற்றி சில மாதங்களுக்கு முன்னர் பேசிய கங்குலி “ரோஹித் ஷர்மா இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்க சம்மதிக்கவில்லை. நான்தான் அவரை வற்புறுத்தி ஏற்கவைத்தேன். அவர் பொறுப்பை ஏற்கவில்லை என்றால் நானே அவர் பெயரை அறிவிப்பேன் என்று சொல்லுமளவுக்கு சென்றது. அவர் ஏன் அந்த பொறுப்பை ஏற்க மறுத்தார் என்பது தெரியவில்லை. ஆனால் கோலிக்கு பிறகு அந்த பொறுப்பை ஏற்று இந்திய அணியை வழிநடத்த அவர்தான் சரியான நபர் என்று நினைத்தேன்.” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் இப்போது இதுகுறித்து பேசியுள்ள கங்குலி “ ரோஹித் ஷர்மாவிடம் திறமை இருப்பதை பார்த்ததாலேயே அவரை நான் கேப்டனாக்கினேன். இப்போது படைக்கும் சாதனைகளைப் பார்த்து நான் ஆச்சர்யப்படவில்லை” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

“நான் டாஸ் போட வரும்போது…” –மும்பை ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்த ஹர்திக்!

கோலியின் சகவீரர் நடுவராக ஐபிஎல் 2025 சீசனில் அறிமுகம்..!

சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு 58 கோடி ரூபாய் பரிசறிவித்த பிசிசிஐ!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குக் கேப்டன் ஆகும் ரியான் பராக்… சஞ்சு சாம்சனுக்கு என்ன ஆச்சு?

வெளிநாட்டுத் தொடரில் வீரர்களுடன் குடும்பத்தினர் தங்கும் கட்டுப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.. பிசிசிஐ தடாலடி!

அடுத்த கட்டுரையில்
Show comments